டயர் வெடித்து, மின்கம்பத்தில் மோதிய கார்

0 2

நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட கவுண்டர். இவருடைய மகன் ராஜவேல் (வயது 39). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு நேற்று காலை காரில் வந்தார். கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு, குமாரபாளையம் நோக்கி கார் புறப்பட்டது. கார், முள்ளக்காட்டை தாண்டி, அங்கு உள்ள தனியார் வங்கி அருகில் சென்ற போது, திடீரென்று காரின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மின்கம்பம் 2 துண்டாக உடைந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.