திருச்சியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது

0 6

palanisamyதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
——————
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாம் 10.08.2016 அன்று நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதல் தவணையாக 10.02.2016 அன்று நடைபெற்றது. இதன் இரண்டாம் தவணை நாளை (10.08.2016) நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் 5,12,242 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 3,85,682 குழந்தைகளுக்கும் என மொத்தம் 8,97,924 குழந்தைகளுக்கும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை நாளை (10.08.2016) வழங்கப்பட இருக்கிறது. இதில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கு (1,88,247) அங்கன்வாடி மையத்திலும் 6 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு (7,09,677) பள்ளிகளிலும் இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்களும் அங்கன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவல் அளித்து குழுந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இக்குடற்புழு நீக்க மாத்திரை இரண்டாம் தவணை வழங்கும் முகாமிற்கு தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.