அரியலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (13.08.2016) நடக்கிறது

0 19

அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து உரிய வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. பதிவுதாரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்காமல் தனியார் வேலைவாய்ப்பிற்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூரில் நடத்தப்பட உள்ளது. அம்முகாமில் கனரக வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனமான டேமளர் இந்தியா பி.லிட், சென்னை. பயிற்சியாளர் பணியிடத்திக்கு 10–ம் வகுப்பு அல்லது மேல்நிலை வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி பெற்றவர்கள் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மட்டும் கொள்ள கோரப்படுகிறது. விருப்பம் உள்ள மனுதாரர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கோட்டு கொள்ளப்படுகிறது.

எனவே, தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி நாளை நேர்காணலுக்கு முற்பகல் 10 மணிக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சொந்த செலவில் ஆஜராகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.