3000 மீ ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் இந்திய வீராங்கனை லலிதா பாபர்

0 14

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ ஓட்டத்தின் முதல் சுற்றில் இந்தியா சார்பில் லலிதா பாபர், சுதா சிங் பங்கேற்றனர்.lalitha

மொத்தம் 18 பேர் அடங்கிய ‘ஹீட் 2’ பிரிவில் இடம் பெற்ற லலிதா பாபர், பந்தய துாரத்தை 9 நிமிடம், 19.76 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்தார். ‘ஹீட் 3’ பிரிவில் இடம் பெற்ற சுதா சிங், பந்தய துாரத்தை 9 நிமிடம், 43.29 வினாடியில் கடந்து 9வது இடம் பிடித்தார்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக பைனலுக்கு முன்னேறுவர். மீதமுள்ள 6 இடங்களுக்கு ஒட்டுமொத்த ரேங்கிங் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இதன்படி 7வது இடம் பிடித்த லலிதா பாபர் பைனலுக்கு முன்னேறினார். 30வது இடம் பிடித்த சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

காலிறுதியில் விகாஸ்:

ஆண்களுக்கான ‘மிடில் வெயிட்’ 75 கி.கி., எடைப்பிரிவு ‘ரவுண்டு-16’ சுற்றில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், துருக்கியின் ஆன்டர் சிபால் மோதினர். இதில் அபாரமாக செயல்பட்ட விகாஸ் கிருஷ்ணன் 3-0 (30-27, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் விகாஸ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பெக்டிமிர் மெலிகுஜிவ் மோதுகின்றனர்.

குர்பிரீத் ஏமாற்றம்:

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் குர்பிரீத் சிங் பங்கேற்றார். மொத்தம் 581 புள்ளிகள் பெற்ற இவர் 7வது இடம் பிடித்தார். முதல் 6 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், குர்பிரீத் சிங் பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.