சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு சிறை தண்டனை

0 6

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரம்

நெய்வேலி அருகே தெற்கு சேப்ளாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் பழனிச்சாமி (வயது 35). பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள கோவிலில் வைத்து கடந்த 4–4–2015 அன்று அந்த சிறுமியை பழனிச்சாமி திருமணம் செய்தார்.

அதன்பிறகு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி சிறுமியின் தந்தை மந்தாரக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

7 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பழனிச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பவானி ஆஜராகி வாதாடினார்.

Leave A Reply

Your email address will not be published.