ரியோ ஒலிம்பிக்: நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி

0 3

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில் அணி வலிமையான கொலம்பியா அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தொடரில் நெய்மர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும். தனக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை சரியாக பயன்பத்தி கோல் அடித்தார்.

அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திலும் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். 83 நிமிடத்தில் பிரேசில் அணியின் லுயான் மேலும் ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல்கள் அடிக்காததால் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரேசில் அரையிறுதியில் ஹோண்டுராஸ் அணியை எதிர்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.