மகிழ்ச்சி முதல் பதக்கத்தை வென்றது இந்தியா !

0 29

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.malik 1

ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

ஆரம்ப சுற்றுகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி, காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இருந்தாலும், வெண்கலத்துக்கான சுற்றுகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த சாக்‌ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.malik

12 ஆண்டு கடினஉழைப்பிற்கு கிடைத்த பரிசு : சாக்ஷி பெருமிதம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தது குறித்து சாக்ஷி கூறுகையில், எனது 12 ஆண்டு கால கடிக உழைப்பிற்கு கிடைத்த பரிசு. போட்டியின் கடைசி நிமிடம் வரை என் உள்மனது கூறிக் கொண்டே இருந்தது பதக்கம் உன்னுடையது தான் என்று. எனக்கு தெரியும் அந்த பதக்கம் எனக்காக காத்திருக்கிறது என. நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.மல்யுத்தம் என்பது 6 நிமிடங்கள் தான். எந்த நொடியிலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடைசி 8 விநாடியில் அதை என்னுடையதாக மாற்றினேன் என்றார்.

சாக்ஷி மாலிக் பதக்கம் வென்றது குறித்து அவரது தாயார் கூறுகையில், எங்கள் கிராமமே அவளை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று சொன்னவர்களுக்கு சரியான பதிலை அவள் அளித்து விட்டாள். இந்த சிறிய வயதில் இந்திய விளையாட்டை திரும்பிப் பார்க்க வைத்து விட்டாள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.