திருச்சி பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி

0 35

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

பல்கலைக்கழக இணைவு பெற்ற 8 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் பங்கேற்ற செஸ் போட்டி புதன்கிழமை தொடங்கியது. 49 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக செஸ் போட்டி நடத்தப்பட்டது.collage

இதில் மாணவர்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரியின் எம். குணால் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் தொடர்ந்து 4 வது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை இவர் வென்றார்.

5.5 புள்ளிகளுடன் கரூர் வள்ளுவர் கல்லூரி கே. காளிதேவ்,  பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி கே. பிரகாஷ், அறந்தாங்கி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர் அஸ்ஷன், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி கஸ்தூப் ஆகியோர் 2 முதல் 5 இடங்களைப் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவி பி.எல். சரசுவதி 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். 6 புள்ளிகளுடன் ஜமால் முகமது கல்லூரி சி.எஸ்.காருண்யா, 5.5 புள்ளிகளுடன் பிஷப் ஹீபர் கல்லூரி கே. வர்ஷினி, எஸ்.ஆர். கல்லூரி ராம்பிரியா, தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவி பூங்குழலி ஆகியோர் 3 முதல் 5 வது இடங்களைப் பெற்றனர்.

பல்கலைக்கழக செஸ் போட்டியில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ, மாணவி தென்மண்டலப் பல்கலைக்கழக போட்டியில் பங்கேறகும் வாய்ப்பை பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் பரிசுகளை வழங்கினார். பல்கலைக்கழக விளையாட்டுத் துறைச் செயலர் பழனிசாமி, ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பி.எஸ்.ஷாஇன்ஷா, உருமு தனலட்சுமி கல்லூரி  சிவகுமார், பிஷப் ஹீபர் கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவர் ஜான், உடற்கல்வி இயக்குநர் ஏ. பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.