ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி

0 24

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை ராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2016–2017–ம் ஆண்டிற்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் கடந்த 8–ந்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதி 24–ந்தேதி என நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறித்த இறுதி நாளுக்குள் மதுரை அல்லது சென்னை ஆகிய மையங்களுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு அந்த மைய முதல்வர்களை கீழ்குறித்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ராணி மேரி கல்லூரி 044 – 2844 4995, ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி 0452 – 2534 988

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.