தேசிய கீதத்தையும் மதிக்க விடாத செல்பி மோகம்

0 14

புதுச்சேரியில், பள்ளியில் நடந்த நிகழ்வில் தேசிய கீதம் பாடப்பட்டபோது முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து காங்கிரஸ் பிரமுகர் கைப்படம் (செல்ஃபி) எடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.selfe

சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசிய கீதத்தை ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை பாட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, புதுச்சேரியில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கீதம் பாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, உருளையன்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் சிவா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் குமார், துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், பள்ளி முதல்வர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின்போது, மாணவிகளுடன் சேர்ந்து நின்று முதல்வர் தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தார். அப்போது, உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான், தான் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருடன் கைப்படம் (செல்ஃபி) எடுத்தார். இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பார்த்தனர். தேசிய கீதம் பாடி முடிந்ததும், முதல்வருடன் ரகுமான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தேசிய கீதம் பாடும்போது, காங்கிரஸ் பிரமுகர் செல்ஃபி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.