கரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை

0 35

கரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.COLLAGE

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் இன்ஜினியர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில்  படித்துவந்த சிவகங்கை மாவட்டம்., மானமதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி (21). இவரை உதயகுமார் ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்துள்ளார். காதலை உதயகுமர் கூறியதற்கு சோனாலி ஏற்றகமறுத்துவிட்டார். மேலும் உதயகுமார் கல்லூரியில் விரும்பதாகத செயல்களில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நிறுத்திவிட்டது. இந்நிலையில் பல மாதங்கள் பிறகு செவ்வாய்கிழமையன்று காலை கல்லூரிக்கு வந்த உதயகுமார்., தான் மீண்டும் கல்லூரியில் இணைந்துவிட்டதாககூறி கல்லூரிக்குள் சென்று., சோனாலி வகுப்பறையில் படித்துகொண்டுயிருப்பதையறிந்து வகுப்பறைக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை சோனாலி மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் கையில்வைத்திருந்த பெரிய கட்டையால் சோனலியின் தலையில் கடுமையாக தாக்கியதில் இரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்துவிட்டார். இதனை சகமாணவ., மாணவிகள்., பேராசிரியர்கள் தடுத்த போது அவர்களையும் தாக்கியுள்ளார். இதனை பார்த்து பயந்துபோன சகமாணவிகள் கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ட்டார். பிறகு மேல்சிகிச்சைக்கு மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சோனாலி பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

கரூரில் தனியார் கல்லூரி மாணவி சோனாலி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். மாணவி தாக்கப்பட்டது குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த தகவலும் அளிக்கவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டினார்.

மாணவி அடித்து கொலை: கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3ம் ஆண்டு மாணவி சோனாலி கொலை செய்யப்பட்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி வகுப்பறையில் புகுந்து 3ம் ஆண்டு மாணவி சோனாலியை இறுதியாண்டு மாணவர் உதயகுமார் என்பவர் கட்டையால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.