தொடரும் அவலம் ; இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை!

0 19

bodyஇறந்து போன மகனின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற அவலம் மீண்டும் வட இந்தியாவில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது 12 வயது மகன் ஆன்ஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான். வீட்டருகே இருந்த மருத்துவமனையில் முதலில்  மகனை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் சுனில் குமார். காய்ச்சல் குறைந்தபாடில்லை.  இதையடுத்து நேற்று காலை சுனில்குமார் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு  மகனை கொண்டு சென்றுள்ளார். மகனைத் தோளில் சுமந்தவரே நடந்தே அவர் கொண்டு சென்றுள்ளார்.

அங்கிருந்த மருத்துவர்களோ சிகிச்சையளிக்க மறுத்து, அருகில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறியுள்ளனர். ஆரம்ப கட்ட சிகிச்சையாவது அளிக்குமாறு சுனில்குமார் கெஞ்சியுள்ளார். மருத்துவர்கள் மறுத்து விட்டனர். ஸ்ட்ரெச்சரும் தரப்படவில்லை. வேறு வழியில்லாமல் மகனைத் தூக்கிக் கொண்டு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .ஆனால், அதற்குள் ஆன்ஷ், தந்தையின் தோளிலேயே இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து சுனில் குமார் கூறுகையில்,.” எனது மகன் 6ம் வகுப்பு படித்து வந்தான். நன்றாக படிப்பான். நான் எனது மகனைத் தோளில் போட்டுக் கொண்டு சிகிச்சை அளிக்குமாறு கெஞ்சினேன். அரை மணி நேரத்திற்கு பிறகே அவனைப் பார்த்தனர்.பின்னர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அதற்குள் என் மகன் எனது தோளிலேயே இறந்து விட்டான். எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்றார்

தொடர்ந்து, சுனில் குமார் உயிரிழந்த மகனின் சடலத்தை தன் தோளில் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. ஒடிஷாவில் மஜ்கி என்பவர் தனது மனைவியின் சடலத்துடன் 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரபிரேதேசத்தில் நடந்துள்ள அவலம் இது.

Leave A Reply

Your email address will not be published.