ஆசிரியர்கள் கற்றுகொடுத்த நல்லொழுக்கத்தை இன்றும் பின்பற்றுகிறேன் – அமைச்சர் நடராஜன் பேச்சு

0 23

திருச்சி புனிதMail-2 வளானார் கல்லூரி மேல் நிலைப்பள்ளியின் 173ம் ஆண்டு விழா கடந்த 27ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வாழ்த்துரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி, திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் சீனிவாசன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகாதேவ்பாண்டின், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் நடராஜன் 1964ல் இந்த பள்ளியில் நான் பயின்போது கல்வி என்பதை தாண்டி நல்லொழுக்கத்தை இப்பள்ளி தனக்கு கொடுத்ததாகவும், அதை தான் இன்றுவரை நான் பின்வற்றி வருகின்றேன் என்றார். மேலும் இப்பள்ளி பல உயர்ந்த நிலை மனிதர்களை உருவாக்கியுள்ளது. இன்றுவரை என்னுடை ஒவ்வொரு ஆசிரியர்களையும் நான் நினைவு கூர்ந்து வருகிறேன். அவர்களின் அறிவுரை இன்றும் என்னை வழிநடத்துவதாக தெரிவித்தார்.இந்த பள்ளியின் முன்னால் மாணவர் என்பதில் பெருமையடைகிறேன் என்று தெரிவித்தார்.

Mailதொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிபர் ஜான்பிரிட்டோ, பள்ளி தலைமையாசிரியர் சைமன்ராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்களின் பரதநாட்டியம், மேற்கிந்திய நடனம், நடடுப்புற நடனம் மற்றும் புதிய கல்வி திட்டம் குறித்த, வீரத்தாய் நாடகங்கள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றை அமைச்சர் நாட்டினார். தலைமையாசிரியர் சைமன்ராஜ்; வரவேற்றார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.