திண்டுக்கல் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த லாரி 2 பேர் படுகாயம்

0 13

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி, தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு லாரி நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை, கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த முருகன் ஓட்டினார். அவருடன் வைரமுத்து என்பவர் பயணம் செய்தார். திண்டுக்கல் அருகே நான்குவழிச்சாலையில், கல்லாத்துப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு மறுபக்கம் சென்று, சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் முருகன், வைரமுத்து ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.