விபத்து பஸ்–மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி டிரைவர் கைது

0 11

ஆலங்குளம் அருகே பஸ்–மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பஸ் மோதியது

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் ஏ.ஜி சர்ச் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேல். அவருடைய மகன் ஜோசப் ராஜா (வயது 28). இவர் அம்பை ரோட்டில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக, ஜோசப் ராஜா தனது மோட்டார்சைக்கிளில் இருந்து ஆலங்குளத்தில் இருந்து நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆலங்குளத்தை அடுத்துள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் ஜோசப் ராஜா தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

டிரைவர் கைது

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஜோசப் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசேதானைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் தென்காசி அருகே உள்ள இடைகால் துரைச்சாமியாபுரம் ஊர் மடத்து தெருவை சேர்ந்த சுடலை என்பவரை கைது செய்தார்

Leave A Reply

Your email address will not be published.