பெரணமல்லூர் அருகே வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

0 14

பெரணமல்லூர் அருகே கீழ்நேத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூரில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். பெரணமல்லூர் அருகே ஜெங்கம்பூண்டி காட்டுபகுதி அருகே சாலை ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மரத்தடியில் தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமராஜனை எழுப்பிய போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமராஜன் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.