திருச்சியில் காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி

0 23

திருச்சி மாவட்டம் மணப்பாறை  மணப்பாறைப்பட்டி ரோடு  பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24).  எம்.பி.ஏ. படித்துள்ள இவர்  திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி.  ஆலோசகராக வேலை பார்த்து வந்தார்.

அதே ஊர் நேருஜிநகரை  சேர்ந்த  சின்னச்சாமி மகன் மணிகண்ட சங்கர் (27). பி.டெக்., படித்துள்ள இவர் சென்னையில்  உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஜீனத்துக்கும்,  மணிகண்ட சங்கருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.  கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.  மணிகண்ட சங்கர் சென்னையில் வேலை பார்த்து வந்தாலும்  தினமும் செல்போனில் பேசி வந்தனர்.

மேலும் அவர்  ஊருக்கு வரும் போது , திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜீனத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஜீனத் பல முறை கர்ப்பமாகி கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஜீனத், தன்னை  திருமணம் செய்து கொள்ளுமாறு மணிகண்ட சங்கரை  பலமுறை வற்புறுத்தியும்,  அவர் பெற்றோர் சம்மதம் இல்லாமல்  திருமணம் செய்ய மாட்டேன்  என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்ட சங்கருக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். அவர்களது திருமணம் இன்று மணப்பாறையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரது உறவினர்களும்  செய்திருந்தனர்.

இதையறிந்த ஜீனத்,  மணிகண்டசங்கரை சந்தித்து  தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே,  மணிகண்டசங்கர், ஜீனத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து நேற்றிரவு மணப்பாறை போலீசில் ஜீனத் புகார் செய்தார்.

புகாரில், மணிகண்ட சங்கரும், நானும்  கடந்த 6 வருடமாக காதலித்தோம். அவர் என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் பலமுறை கர்ப்பமானேன். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானது வெளியே தெரியவந்தால் அவமானம் ஆகிவிடும் என்று கூறி, மணிகண்ட  சங்கர் எனக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்தார். இப்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இதனை தட்டிக்கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

எனவே திருமணத்தை தடுத்து நிறுத்தி மணிகண்டசங்கரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்  சிவக்குமார் இன்று காலை மணிகண்டசங்கரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து இன்று காலை  திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு போலீசார் சென்றனர். திருமணத்தில் பங்கேற்க இரு வீட்டாரது உறவினர்களும் குவிந்திருந்தனர். போலீசார் வந்ததை பார்த்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  நடந்த விவரத்தை கூறி, மணிகண்டசங்கரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். திருமணம் நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரு வீட்டாரது உறவினர்களும் மண்டபத்தில் இருந்து சோகத்துடன் வெளியேறினர். மணமகன்-மணமகள் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டசங்கர் – ஜீனத்திடம்  போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.