தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

0 30

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் தி.நகர், அண்ணாநகர் பகுதி செயலாளர் பதவி பறிப்பு

 தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். தி.நகர், அண்ணாநகர் பகுதிச் செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்சென்னை வடக்கு மாவட்ட அவைத் தலைவராக விஜயராமகிருஷ்ணாவும், மாவட்ட செயலாளராக கலைராஜனும், இணை செயலாளராக ரத்தினகுமாரி, துணை செயலாளர்களாக கற்பகம், சீனிவாசன், பொருளாளராக கண்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவராக பழனிச்சாமியும், செயலாளராக பவானிசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவராக லட்சுமி நாராயணன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவராக சதீஷ், மாணவர் அணி தலைவராக அம்புலிராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக வீரை கறீம், மீனவர் பிரிவு மாவட்ட தலைவராக சுப்பிரமணி, மருத்துவர் அணி மாவட்ட தலைவராக புஷ்பா, இலக்கிய அணி மாவட்ட தலைவராக சுப்புராயன், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக பாலமணி மார்பன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தி.நகர் பகுதிச் செயலாளர் ஏழுமலை, திருவல்லிக்கேணி வடக்கு 62வது வட்டச் செயலாளர் பி.எம்.ஜெய்சங்கர், 63வது வடக்கு வட்ட செயலாளர் கோழிக்கடை மோகன், 114வது மேற்கு வட்ட செயலாளர் எம்.கே.சிவா, 115வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.மோகன், 116வது கிழக்கு வட்டச் செயலாளர் கலைவாணன், 109வது வடக்கு வட்ட செயலாளர் எம்.சேகர், 109வது தெற்கு வட்டச் செயலாளர் பார்த்தசாரதி, 111வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.உமாபதி, 112வது வட்ட செயலாளர் வரதை முத்துபரணி, 118வது வட்ட செயலாளர் ஜிம் கிளி பச்சையப்பன் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் பகுதி செயலாளர் ஏ.இ.வெங்கடேசன், துணை செயலாளர் தீனன், பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், 100வது கிழக்கு வட்டச் செயலாளர் கந்தன், 101வது மேற்கு வட்ட செயலாளர் சடையன், 102வது கிழக்கு வட்ட செயலாளர் ஜி.தமிழ்செல்வம், 103வது மேற்கு வட்ட செயலாளர் ஜி.செழியன் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தி.நகர் பகுதி செயலாளராக பால்ராஜ், மாவட்ட பிரிதிநிதியாக ராமலிங்கம், 62வது வட்ட செயலாளராக செல்வக்கண்ணன், 63வது வடக்கு வட்ட செயலாளராக சாகுல் அமீது, 114வது மேற்கு வட்ட செயலாளராக டி.ஜெயச்சந்திரன், 115வது கிழக்கு வட்ட செயலாளராக கே.கிருஷ்ணமூர்த்தி, 116வது வட்ட செயலாளராக சுந்தரமூர்த்தி, 120வது கிழக்கு வட்ட செயலாளராக குமரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் பகுதி செயலாளராக டி.தசரதன், துணை செயலாளராக குணசேகரன், பொருளாளராக விஜயன், மாவட்ட பிரதிநிதியாக கோ.செழியன், 100வது கிழக்கு வட்ட செயலாளராக தனசேகர், 101வது மேற்கு வட்ட செயலாளராக சுலைமான், 102வது கிழக்கு வட்ட செயலாளராக ராஜ்குமார், 103வது மேற்கு வட்ட செயலாளராக ஜனார்த்தனன், ஆயிரம்விளக்கு 109வது வடக்கு வட்ட செயலாளராக கபிலன், 109வது தெற்கு வட்ட செயலாளராக ராஜேஷ், 111வது கிழக்கு வட்ட செயலாளராக சந்துரு (எ) சந்திரகுமார், 112வது கிழக்கு வட்ட செயலாளராக விஜயகுமார், 118வது கிழக்கு வட்ட செயலாளராக பன்னீர்செல்வம், 118வது மேற்கு வட்ட செயலாளராக கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில், தி.நகர் பகுதிச் செயலாளராக இருந்த ஏழுமலை ஆரம்பத்தில் கலைராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதன்பின் அவர் தி.நகர் எம்எல்ஏ சத்தியநாராயணன் ஆதரவாளராக மாறினார். அதேபோல, அண்ணாநகர் பகுதி செயலாளர் வெங்கடேசனும் கலைராஜனின் ஆதரவாளராக இருந்தார். அதன்பின், கோகுல இந்திராவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். பின்னர் மாவட்டச் செயலாளருடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சென்னையில் அதிமுகவுக்கு தேர்தலில் பலத்த அடி விழுந்தது. இதனால் கலைராஜன் தனது மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றிவிட்டார்

Leave A Reply

Your email address will not be published.