திருச்சி மத்திய பேருந்து நிலையம் திறந்த வெளி பாராக மாறிய அவலம்!

0 7
தூய்மையான மாநகராட்சி என்று பெயர் வாங்கிய திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையம் தற்போது திறந்தவெளி பார் மையங்களாக செயல்படுகிறது.
WhatsApp Image 2016-09-06 at 10.51.06 PM WhatsApp Image 2016-09-06 at 10.51.01 PM WhatsApp Image 2016-09-06 at 10.50.52 PM WhatsApp Image 2016-09-06 at 10.50.42 PM
சுற்றுசுழல், சுகாதாரம் ஆகியவற்றிற்கு பெயர் வாங்கின திருச்சி மாநகராட்சியின் மேற்பார்வையில் உள்ளது திருச்சி மத்திய பேருந்து நிலையம்.
இது தமிழகத்தின் மையப்பகுதி என்பதால் இந்த பேருந்து நிலையத்தில் எந்த நேரமும் மக்களின் நடமாட்டம் இருக்கும். இந்த பேருந்து நிலையத்தை சுற்றி 4 டாஸ்மார்க் கடைகள் இருப்பதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் அவசரமாக செல்வதற்கு முன்னால் சரக்கு பாட்டில்களை வாங்கி  பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் பின்புறம், அரசு போக்குவரத்து முன்பு பதிவு செய்யும் அலுவலகம் முன்புள்ள  சுவற்றிலே வைத்து திறந்த வெளி பார் போன்று பயன்படுத்துகிறர்கள். இவர்களோடு  பேருந்து நிலையத்திலே சுற்றி திரியும் சில கிரிமினல்கள் இதை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கொள்ளும் அவல நிலையும் உள்ளது. இதனை தடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகவும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுயிருக்கிறது என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனை.
நன்றி நக்கீரன்

Leave A Reply

Your email address will not be published.