பெங்களூரில் தமிழ் நாளிதழ்கள் தீயிட்டு எரிப்பு!

0 22

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான பந்த்தாக மாற்றியுள்ளனர். கேபிள் டிவி சேனல்கள் கட் செய்யப்பட்டுள்ளன, அதேபோல தமிழ் செய்தித்தாள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி, தினமkavariணி உள்ளிட்ட 5 தமிழ் பத்திரிகைகள் பெங்களூரில் வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.

அவற்றை இன்று ஏஜென்சிகள் வினியோகம் செய்யாமல் போராட்டம் நடத்திவருகின்றன.

சில இடங்களில் அதிகாலையில் வந்த செய்தித்தாள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன் மூலம் தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வையும், அறிந்து கொள்ளக்கூடாது என முடக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்திரிகை ஏஜென்ட் ஒருவர், செய்தித்தாள் மட்டுமல்ல, காவிரிக்காக உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.