இந்தியாவை தலைநிமிர செய்த தமிழக தங்கமகன் யார் இவர்..?

0 40

சாதனை நாயகன்

சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21ntlrg

குக்கிராமம்

தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்துள்ளார் தங்கவேலு.

காய்கறி விற்ற தாய்

தங்கவேலுவின் தாயார் காய்கறி விற்பனை செய்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். தங்கவேலுவின் மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருந்தார் அவர். இன்னமும், அந்த 3 லட்சத்துக்கான, வட்டி, அசலை திருப்பி செலுத்தி வருகிறது தங்கவேலு குடும்பம்.amma

ஆசிரியர்கள் ஊக்கம்

கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். பள்ளி பருவத்தில் மாரியப்பனின் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.

விடாமுயற்சி

2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கவனித்து வருகிறார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.unnamed-1

பெங்களூரில் பயிற்சி

பெங்களூவில், சத்யநாராயணா என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றவர் தங்கவேலு. 5 வயதாக இருந்தபோது, பள்ளிக்கு சென்ற வழியில், பஸ் மோதியதால், வலது கால் உடைந்துபோனது. அதன்பிறகு 5 வயதுக்கு உரிய காலாகவே அது மாறிப்போனது. குணமடையவும் இல்லை. வளரவும் இல்லை

சிறந்த கோச்

விளையாட்டு என்பது தொழிலாக மாறிவிட்டாலும், தனது தாயாரின் கஷ்டத்தை போக்க நல்ல வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். இப்போது பாரா ஒலிம்பிக்கில் சாதித்துள்ள நிலையில், சன்மானங்கள் அவரது குடும்ப வறுமையை போக்கும் என நம்பலாம். பேட்மின்டனுக்கு ஒரு கோபிச்சந்த் போல, உயரம் தாண்டுதலுக்கு, சத்தியநாராயணா மிகச்சிறந்த கோச்சாக உருவெடுத்து வருகிறார். 2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரிஷாவுக்கும் சத்தியநாராயணாதான் பயிற்சியாளர்.

குவித்த பதக்கங்கள்

மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாரியப்பன். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.

உயரம் தாண்ட ஊக்கம்

பள்ளி காலத்தில் வாலிபாலில் தங்கவேலு ஆர்வம் காட்டினார். ஆனால், அவரிடம், உயரம் தாண்டுதலுக்கான திறமை ஒளிந்திருந்ததை கவனித்த பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர், உயரம் தாண்ட ஊக்கம் கொடுத்தார். அவர் கூறியது பலித்தது.

கண்ணில் தென்பட்ட ஸ்பார்க்unnamed

பயிற்சியாளர் சத்தியநாராயணா கண்களில் தங்கவேலு கடந்த 2013ல் பட்டார். பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வந்த தங்கவேலுவை பார்த்ததும், சத்தியநாராயணாவுக்கு ஏதோ ஒரு ஸ்பார்க். உடனே பெங்களூரில் வைத்து பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

தங்கமகன் மாரியப்பன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் பங்கேற்க நித உதவி வழங்கி ஊக்கம் அளித்து வரும், வாலிபால் பெடரேஷன் ஆப் இந்தியா தலைவர் சந்திரசேகரன் மற்றும் பயிற்சியாளர் சத்யநாராயணன் ஆகியோர் மாரியப்பன் தங்கம் வெல்வால் என்று நம்பிக்கையுடன் பேசினர். பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் ஒரே தாவலில், உலகின் பார்வையை தன் வசம் ஈர்த்து, 100 சதவீதம் வெற்றியுடன், தங்கம் வென்று தாயகம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர் வெற்றி பெற உங்களுடன் சேர்ந்து, நாங்களும் கடவுளை பிராத்திக்கிறோம் என்று கூறினர். அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தங்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.

Leave A Reply

Your email address will not be published.