மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் திருச்சி கலெக்டர் தகவல்

0 22

palanisamyதிருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்; வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியம் வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.08.2016 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசயாயிகள் வாங்க நடப்பாண்டில் ரூ.31 கோடியே 6 இலட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். இத்திட்டம் வேளாண் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நெல்நாற்று நடவு செய்யும் இயந்திரம், பவர்டில்லர், சுழற்கலப்பை, குழி தோண்டும் கருவி, விசை களையெடுக்கும் இயந்திரம், பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான்கள், மனித தோழமைக் கருவிகளான தென்னை மரம் ஏறும் கருவி, நேரடி நெல் விதைப்புக் கருவி போன்ற கருவிகளும் மற்றும் டிராக்டர் மற்றும் பவர்டில்லர் ஆகியவற்றால் இயக்கப்படும் இதர வேளாண்மைக் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தில், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50மூ வரையும், இதர பிரிவு விவசாயிகளுக்கு 40மூ வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையலாம்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டையின் நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, சாதிச்சான்றின் நகல், டிராக்டரில் இயங்கக்கூடிய கருவிகளாக இருப்பின் டிராக்டரின் பதிவு சான்றின் நகல் போன்ற ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கக வேண்டும்.

இவ்விபரங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் முன்னுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு மூதுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுமு;. வேளாண் பொறியியல் துறையின் அனுமதிக் கடிதம் கிடைக்கப்பெற்ற உடன் தேர்வு செய்த கருவிகள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றிற்குரிய முழுத் தொகையையும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு கேட்பு வரைவோலை மூலமாக வழங்க வேண்டும்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் பெற்ற பின்னர், அதனை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் உறுதி செய்து அதற்குரிய முழுமானியத் தொகையையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தவார்கள்.

விவசாயிகள் வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க, இத்திட்டத்திற்கென திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.59.64 இலட்சம் சிறு, குறு மற்றும் மகளிர் விவசாயிகள் உட்பட பொது பிரிவு விவசாயிகளுக்கும் மற்றும் ரூ.12.90 இலட்சம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மானிய விலையில் கருவிகள், இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக வேளாண்மைப் பொறியியல் துறையில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பயனடைய விருப்பமுள்ள

அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலுள்ள விவசாயிகள்;

உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம், எண்-2, ஜெயில் கார்னர், திருச்சி-620 020 என்ற முகவரியிலும்,

முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலுள்ள விவசாயிகள்

உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம், எண்-18ர்ஃகண்ணதாசன் தெரு, முசிறி-621 211 என்ற முகவரியிலும்,

இலால்குடி, புள்ளம்பாடி மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் அல்லது விவசாய குழுக்கள்

உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகம், லூர்து இல்லம், 451ஃ2, 8-வது குறுக்கு தெரு, காமராஜர் நகர் தெற்கு, இலால்குடி – 621 601 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும், தங்களது பெயரினை பதிவு செய்து மூதுரிமை அடிப்படையில் பயன் அடையலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.