திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி

0 15

anna-dogs-roam-the-grounds-public-awadhi_திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும், விளையாட்டு விடுதி மாணவர்களும் இங்கு தான் ஆக்கி, கைப்பந்து, நீச்சல், டென்னிஸ், கபடி என பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுத்து கொள்கிறார்கள்.

அவ்வப்போது மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அகிலஇந்திய அளவிலான ரெயில்வே தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

திருச்சியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அண்ணா விளையாட்டு மைதானத்தில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.

இந்த நாய்கள் நடைபயிற்சி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களையும் கடிக்க பாய்கிறது. நாய்களுக்கு பயந்து பெண்கள் நடைபயிற்சி செல்லவே தயங்குகிறார்கள்.

மேலும், அதிக அளவில் திரியும் நாய்களால் விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் முறையாக பயிற்சி பெற முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள்.

ஆகவே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.