ஒரு தலை காதல் தறுதலைகளின் கொலை வெறி செயல்கள் !

0 3

இப்படி கொலை செய்வதுதான் காதலா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில்  இரண்டு இளம் பெண்கள் படுகொலை, ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்ய முயற்சி, புதுவையில் இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்… என தொடர்ச்சியாக நிகழ்ந்த மனித மிருகங்களின் கொலைவெறிச் செயல்கள்.

பகீர் கொலை-1

மதுரை மாவட்டம் மானகிரியைச் சேர்ந்தவர் சோனாலி. கரூர்-ஈரோடு ரோட்டிலுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் மாணவியான இவர், கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் இவரது தந்தை செல்வம் காலமானார். தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தாயின் கனவை நனவாக்கும் பொருட்டு, படிப்பில் மட்டும்  முழுக்கவனத்தை செலுத்தி வந்தார். இதே சிவில் பிரிவில் பயின்று வந்தவன் இராம நாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வெங்களூரைச் சேர்ந்த உதயகுமார். ஒரே சமூகம் என்பதால் அடிக்கடி சோனாலியிடம் காதல் வசனம் பேசி உருகியிருக் கிறான். ஆனால்  சோனாலியோ தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். love-murder

மாணவனான உதயகுமார், கல்லூரியிலும் விடுதியிலும்  மல்லுவேட்டி மைனர் ரேஞ்சுக்கு குடியும் கூத்துமாகப் பண்ணிய சேட்டைகளால் ஒரு வருடத்திற்கு முன்பே கல்லூரி நிர்வாகத்தால் சஸ் பெண்ட் செய்யப்பட்டான். சொந்த ஊரில் தண்டச்சோறாகத் திரிந்த தறுதலைக்குள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது சோனாலி மீதான ஒருதலைக் காதல்.

கடந்த 30ஆம் தேதி காலை கல்லூரிச் சீருடை அணிந்துகொண்டு, சோனாலியின் வகுப்பறைக்குள் நுழைந்தவன், தன்னை காதலிக்கச் சொல்லி சோனாலியைக் கட்டாயப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த மூன்றடி நீள மரக் கட்டையை எடுத்து, சோனாலியை சரமாரியாக தாக்கத் தொடங்கிவிட்டான். தடுக்க முயன்ற பேரா சிரியர் பிரகாஷுக்கும் சரியான அடி. ரத்தவெள்ளத் தில் கிடந்த சோனாலிக்கு சக மாணவர்களும் ஆசி ரியர்களும் கரூர் அப்பல்லோ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச் சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக இறந்தார் சோனாலி. கொலைத் தாண்டவம் ஆடிய உதயகுமார், நீண்ட நேரமாக கல்லூரி வளாகத்திற் குள்ளேயே சுற்றித் திரிந்துவிட்டுத்தான் தப்பி ஓடி யிருக்கிறான். சில மாணவர்களின் உதவியுடன் அவனைப் பிடித்துள்ளது போலீஸ். இப்போது திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான் உதயகுமார்.


பகீர் கொலை-2

தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திரா நகர் நியூமென்னின் மகள் ஃபிரான்சினா. வீட்டிற்கு அருகில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியை யாகப் பணிபுரிந்து வருகிறார். வருகிற 08-ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் வேலையிலிருந்து விலகும் தகவலை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்காக, கடந்த 31ஆம் தேதி காலை நடந்து  சென்றுள்ளார். அப்போது தன்னை பின்தொடர்ந்த வாலிபர் கீகன்   ஜோஸைப் பார்த்ததும், பள்ளிவளாகத்திற்குள் ளேயே இருக்கும் தேவாலயத்திற்குள் சென்று கண்ணை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார் ஃபிரான்சினா. ஆலயத்துக்குள் நுழைந்த கீகன் ஜோஸ், அரிவாளால் வெறித்தனமாக ஃபிரான்சினாவை வெட்ட, சிலுவையின் முன்பு ரத்தச் சகதியில் உயிரைவிட்டார் ஃபிரான்சினா. போலீஸ் பிடித்துவிடும் என்ற பயத்தில் கீகனும் தற்கொலை செய்துகொண்டது கூடுதல் கொடுமை.

நாம் இந்திரா நகர் இளைஞர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, “”ஃபிரான்சினாவும் கீகனும் மீன் பரவர் சமுதாயத்தைச் சேர்ந்தவங்க தான். ஹார்பர்ல கிரேன் ஆபரேட்டரா வேலை பார்க்கும் கீகன், அந்தப் பொண்ணுகிட்ட தன்னோட லவ்வை சொல்லீருக்கான், மறுப்பும் சொல்லாம, எதிர்ப்பும் காட்டாம அமைதியா இருந்திருக்கு அந்தப் பொண்ணு. இதனால் கீகன் ஓவரா கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டான். கீகனைவிட படிச்ச, வசதியான மாப்பிள்ளை  ஃபிரான்சினாவுக்கு கிடைக்க, அவங்க குடும்பத்தில் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. இப்ப அநியாயமா அந்தப் புள்ளயோட உயிரும் போயி, கீகனும் தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான்”’என “உச்’ கொட்டினார்கள்.

பகீர் கொலை முயற்சி!

திருச்சி விமானநிலைய போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ரவி, கண்டோன்மென்ட் எஸ்.ஐ.பாத்திமா காதல் தம்பதியின் மகள் மோனிகா. நகரில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் மைக்ரோபயாலஜி படிக்கும் மோனிகாவை, அவரின் வீட்டருகே வசிக்கும் பாலமுருகன் ஒருதலையாகக் காதலித்துள் ளான். ஒரு வருடக் காதல் கைகூடாமல் போகவே, கடந்த 31-ஆம்தேதி மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டி ருந்த மோனிகாவை வழிமறித்து, கத்தி யால் எட்டு இடங் களில் சகட்டு மேனிக்கு குத்தி விட்டு, கரப்பான் பூச்சியைக் கொல் லும் மருந்தைக் குடித்திருந்ததால் அங்கேயே மயங்கிச் சரிந்துவிட்டான். ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் பாலமுருகன். கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மோனிகா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார்.

“”பொண்ணும் பையனும் வேற வேற சாதி. ரெண்டு பேரின் வீட்டிலும் எதிர்ப்பு. இந்தக் கிறுக்குப்பய இப்படிப் பண்ணுவான்னு எதிர் பார்க்கவேயில்லை”’என்றார் நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி.

புதுவையிலும் கொலை முயற்சி!

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர் குடியிருப்பில் வசித்து வருபவர் மரியஜோசப். முன்னாள் ராணுவ  வீரரான இவரது மகள் ஹீனோ டோனிஸ் (19). சேதாரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் அய்யன்குட்டிபாளையம் தீராளன் மகன் எழிலரசன் (19) என்பவரும் பி.காம் படித்து வருகிறார். ஹீனோ டோனிஸும், எழிலரசனும் பள்ளியில் படிக்கும்போது ஒரே டியூஷன் வகுப்புக்கு சென்று வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பனிரெண் டாம் வகுப்பு படிக்கும்போதே காதலுக்கு தூபம் போட்டுள்ளான் எழில்.

இந்நிலையில்  பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஹீனோவை லஷ்மிநாராயணா கல்லூரியில் சேர்த்தனர். அதே கல்லூரியில் எழிலரசனும் சேர்ந்துள்ளான். தொடர்ந்து  ஹீனோவிடம் காதல் தொல்லை கொடுத்துள்ளான். இவன் தொல்லை தாங்காமல் ஹீனோவை கடந்த பத்து  நாட்களுக்கு முன்பு விழுப்புரம்  மாவட்டம் சேதாரப்பட்டில்  உள்ள அரவிந்தர் கல்லூரியில் அவரது பெற்றோர் சேர்த்தனர். எழிலரசனும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் வந்துசேர்ந்தான். இங்கு வந்தபிறகும் எழிலரசன், ஹீனோவை விடவில்லை. ஆனால் ஹீனோ  எழிலரசனை முற்றிலும் புறக்கணித்தார்.

விபரம் அறிந்த ஹீனோ டோனிஸின் பெற்றோரும் எழிலரசனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு கல்லூரி முடிந்து ஊசுட்டேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய ஹீனோ தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எழிலரசன் மருத்துவமனை நுழைவு வாயில் அருகே வழிமறித்து, தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஹீனோ டோனிஸை வெட்டியுள்ளான். இதில் ஹீனோவின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலியில் அலறிய ஹீனோ வின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் எழிலரசன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். மருத்துவமனையில் ஹீனோ டோனிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். வியாழன் இரவு வரை எழிலரசனை போலீஸ் தேடியபடியே இருந்தது.

விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியைச் சேர்ந்த 18 வயது செவிலியர் புஷ்பலதாவுக்கு காதல் தொல்லை தந்த 22 வயது தனசேகர் ஆபாசமான வார்த்தை களால் பேசியிருக்கிறார். மனமுடைந்த புஷ்பலதா தூக்குப் போட்டுக் கொள்ள, அவரைக் காப்பாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். அரசே நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளி-கல்லூரி மாணவர் கள் தொடங்கி அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் கவர்ந்திழுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்கி விட்டது. மாணவி சோனாலியை கல்லூரிக்குள் புகுந்து தாக்கிய சஸ் பெண்ட் மாணவன் உதயகுமார், பெரும்பாலான நேரங்களில் போதை யில்தான் இருப்பான் என்கிறார்கள் சக மாணவர்களே. மூளைக்குள் ஏறும் போதையினால், நினைத்ததையெல்லாம் அடைய வேண்டும் என்ற வேகமும், கிடைக்காவிட்டால் பழிதீர்க்கும் வெறியும்  சேர்ந்து கொள்கிறது. அதன் விளைவுதான், மிருகத்தனமான முறையில் கட்டையால் தாக்கி சோனாலியை கொலை  செய்திருக்கிறான். உதயகுமார் போல நிறைய இளைஞர்கள் ஒருதலைக் காதலில் விழுந்து, போதைக்கு அடிமையாகி கொலைவெறியர்களாகிறார்கள் என்கிறது வழக்கை விசாரித்துவரும் காவல்துறை.

இளசுகள் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருப்ப தால் ஆண்-பெண் பேதமின்றி சகஜமாக உரையாடுவதும், சாட் செய்வதும் வழக்கமாகிவிட்டது. இளம்பெண்கள் அனுப்பும் மெசேஜ் களை காதல் சிக்னல்களாக கருதும் இளைஞர்கள், ஒருகட்டத்தில் ஏமாறும்போது மிருகமாகிவிடு கிறார்கள். ஸ்வாதி கொலையில் தொடங்கி பல கொலைகளிலும் இந்த ஸ்மார்ட் போனும் அதன்மூல மாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என சமூக வலைத்தளங் களில் விடிய விடிய தொடர்பில் இருப்பதும் முக்கிய காரணியாக உள்ளது என்பதையும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
கடும் தண்டனைகள் நிறை வேறும்வரை இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ?

நன்றி -நக்கீரன்

Leave A Reply

Your email address will not be published.