சினேகா பாலா எழுதும் ஆயிரம் கனவுகள் தொடர் நாவல் தொடர் – 1

0 27

கனவுகள் ஆயிரம் (1) 

சினேகா பாலா

7794

அன்றும் அவள் கனவு கண்டாள். பயந்து படுக்கையில் இருந்து எழுந்தாள். எப்போதும் போல் இல்லாமல் அன்று கொஞ்சம் பயங்கரமாக இருந்தது அகிலாவிர்க்கு. அகிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். எழுந்து அம்மாவின் கையால் காபி குடித்துவிட்டு குளித்து கல்லூரிக்கு சென்றாள். மனம் எதிலும் ஈடுபடவில்லை. இரவு கண்ட கனவில் தான் இருந்தது. அப்படியே யோசித்தாள்.அவள் ஏதோ மலையில் நிற்கிறாள். அங்கு ஒரு மரத்தில் அகிலா ,ராஜ் என்று எழுதியிருந்தது.

பார்ததும் வியந்து நிற்கிறாள். ஓடி சென்று அதை தொடுகிறாள்.அவள்  கை மீது  வேறொருவர் கை இருக்கிறது. அதை  பார்த்து  அதிர்கிராள். கையை விடுவிக்க முயன்றாள் முடியவில்லை. அகிலா அகிலா என்று கத்தும் சத்தம் வேறு. எப்படியோ கையை விடுவித்து விட்டு ஓடினாள். கனவு கலைந்து எழுந்தாள் அவள்.
                      
பக்கத்தில் நின்ற தேவி அவளை ஒரு உலுக்கு உலுக்கிய போது தான் நினைவுக்கு வந்தாள். “ஏய் அகிலா என்ன ஆச்சுடி பேய பார்த்த மாதிரி இப்படி வெளுத்து போய் இருக்க”.

%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1
  “அது ஒண்ணும்மில்லை. கிளாஸ்க்கு போலியா “என்றாள் அகிலா.தேவி  “ஏதோ மறைக்குர கண்டுபிக்கிறேன்”.

அதெல்லாம் ஒண்ணும்மில்ல வா போலாம் என்று அவளை இழுத்து சென்றாள் அகிலா.
                   
அருண் அன்று தன் நண்பர்களை காண  தயார்ஆகி  கொண்டு  இருந்தான் .அவனுக்கு அப்பா மட்டும் தான். அவன் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்நான்.

அப்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பினான் அருண் தன் விலை உயர்ந்த பைக்கில்.
                      

அருண் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். குளிர்வுட்ட பட்ட அறையில் அவனுக்காக ரகுவும் விமலும் காத்துக்கொண்டிருந்தனர்.

ஹாய் டா!  என்றான் அருண் இருவரிடமும்.”வாடா வா எப்டிடா கிலாஸ்க்கு தான் லேட்டா வருவ இதுக்குமாடா” என்றான் ரகு பொய் கோபத்தோடு. இடையில் நுழைந்தான் விமல்”அடேய் பசிக்குதுடா “.மூன்று பேரும் வேண்டியதை ஆர்டர் செய்தனர். அப்போது ரகு “மச்சான் நம்ம இன்னும் கொஞ்சம் நாள பிரிஞ்சுருவோம். அதுக்கு முன்னாடி  ஒரு டூர் போலாமா” என்றான். மற்ற இருவரும் ஆமோதித்தனர். எங்கு போலாம் என்று மூவரும் சாப்பிட்டுக் கொண்டே யோசித்தனர். விமல்  அப்போது நாம் கொல்லி மலைக்கு போலாமா என்றான். உடனே ரகு “ஓ போலாமே.அருவில போய் குளிச்சிட்டு அப்டியே மலையை சுற்றி பார்த்துட்டு வரலாம்”என்றான்.
அருண் “நானும் ரெடி.

என்னோட கார்ல  போய்ட்டு வந்தரலாம்.அப்ப இந்த வாரம் ஞாயிறு அன்று போகலாமா”என்றான்.மற்ற இருவரும் சரி என்றனர்.மூவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
                  
அகிலாவின் கல்லூரியில் அன்று ஒரே பரபரப்பு. காரணம் அவர்கள் கல்லூரியில் சுற்றுலாவிற்கு அறிவிப்பு வந்து இருந்தது. அகிலாவிர்க்கு போக மனம் இல்லை. அவள் இதை தேவி இடம் பலமுறை கூறியும் அவள் கேட்பதாக இல்லை. தேவியின் வற்புறுத்தலின் பேரில் அவள் கொல்லி மலைக்குச் செல்ல பெயர் கொடுத்தாள்.

மகிழ்ச்சியாக சுற்றுலாவிர்க்கு புறப்படும் அருண் மற்றும் அகிலாவை பார்த்து அவர்களின் விதி புன்னகை செய்தது.

  கனவுகள்தொடரும்…..

ஆயிரம் கனவு குறித்த உங்கள்  கனவுகளுக்கு   [email protected]

Leave A Reply

Your email address will not be published.