இப்படியும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்-ஆச்சரியப்படும் அரசியல் நிருபர்

0 2

உள்ளாட்சி தேர்தல் ஊரே பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கு. நாமினேசன் தாக்கல் செய்ய கூட்டம் காண்பிக்கவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டி ஊர்வலமாய் போய் வேட்டு வைத்து  பிரச்சாரம் போகிறார்கள். ஆனால் இந்த தேர்தல் ஆடம்பரமே இல்லாமல் சில மனிதர்கள் இருக்கிறார்கள்..

இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்க்கு சென்று கொண்டிருந்தேன்.அப்போது ரயில் நிலையம் அருகில் ஒரு கையில் கைப்பையுடன் தோளில் சிகப்பு துண்டோடு ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.இவரை எங்கேயோ பார்த்த நியாபகத்தோடு வண்டியை நிறுத்தினேன்.நிறுத்தி நிதானித்து பார்த்ததும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துனை செயலாளர்.சி.மகேந்திரன் அய்யா என்பதை தெரிந்து கொண்டு அவரிடம் போய் அய்யா எங்கே நடந்து போகிறீர்கள் என்றேன் அவர் அரண்மனை அருகே இருக்கும் பார்ட்டி ஆபீஸிற்க்கு போகிறேன் என்றார்.வாருங்கள் நான் வண்டியில் கூப்பிட்டு போகிறேன்.வேண்டாம் உங்களுக்கு சிரமம் நான் நடந்தே போகிறேன் என்றார்.அவரை பிரிய மனமில்லாமல் கட்டாய படுத்தி வண்டியில் ஏற்றி அவரை அவரின் அலுவலகத்தில் சேர்த்தேன். அவரிடம் பல தரப்பட்ட கருத்துகளை விவாதித்து வட்டு மன நிறைவோடு திரும்பி வந்தேன்.கிட்தட்ட அவர் போக வேண்டிய தொலைவு இரண்டு கீ.மி.அதிகமாக தான் இருக்கும்.போகும் வழியில் அதிமுக சார்பில் கவுன்சிலருக்கு நாமினேசன் செய்ய ஆயிரக்கணக்கானோர் தாரை தப்பாட்டம் முழங்க ரோட்டை மறித்து ஆராவராத்தோடு சென்றனர்.ஒரு கவுன்சிலருக்கு இந்த ஆராவராம் ஆனால் சி.ம.வோ.ஒரு கட்சியின் மாநில துனை செயலாளர் மூத்த கம்யூனிஸட் வாதி. இவர் நினைத்திருந்தால் கட்சியினரை அழைத்திருக்கலாம்.கட்சி காரை வரவழைத்திருக்கலாம்.இல்லை ஒர் ஆட்டோவில் கூட போயிருக்கலாம்.இருப்பினும் நடந்தே செல்லலாம் என்ற மன தைரியத்திலும் எளிமையிலும் தான் இவரை போன்ற உண்மையான கம்யூனிஸ்ட்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

(இது விளம்பரத்திற்க்காக பதிவிடவில்லை இவரை போன்ற நல்ல எளிமையான மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள் இருக்கிறார்கள்.என்பதற்க்காக பதிவிடுகிறேன்.)

முகநூலில்   நிரூபர் விஜய் தஞ்சை

14469470_985200654935165_6915112135931561706_n

Leave A Reply

Your email address will not be published.