குழந்தைகளை தத்து கொடுக்க ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் !

0 3

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லாச் சான்று வழங்குவதற்கு ஆட்சேபணை இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுத் தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

10.11.2015 அன்று திருச்சிராப்பள்ளி இரயில்வே நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பெறப்பட்ட ஆண்குழந்தை தமிழ்செல்வன் என்ற பெயரிடப்பட்டு மதுரை மாவட்ட குழந்கைள் நலக்குழுவின் பாதுகாப்பில் கிரேஸ் கென்னட் பவுன்டேசன் மழலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

13.05.2016 அன்ற திருச்சிராப்பள்ளி காஜாமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தை லிஃபி என்று பெயரிடப்பட்டு மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் அழகுசிறை கிளரிசியன் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.collage-2016-10-07

இவ்வறிவிப்பினை காண்பவர்கள் இக்குழந்தைகளைப் பற்றிய விபரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் ஏழு நாட்களுக்குள் தலைவர், குழந்தைகள் நலக்குழு, 21-22, கென்னட் நகர், முத்துப்பட்டி, மதுரை – 625 003, அலைபேசி எண் 94433 35630 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தகவல் தெரிவிக்காவிடில் இக்குழந்தைகளை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு : 90472 83819.

Leave A Reply

Your email address will not be published.