திருச்சி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவவியர்களுக்கு கல்வி உதவித் தொகை

0 24

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும்
சிறுபான்மையின மாணவியர்களுக்கு மௌலான ஆசாத்; கல்வி உதவித்தொகை
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
—————

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு மௌலான ஆசாத்; கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மௌலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிருத்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூபாய் 12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் 11ம் வகுப்பிற்கு ரூபாய் 6 ஆயிரமும் மற்றும் 12ம் வகுப்பிற்கு ரூபாய் 6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

maef_nic_in
கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 1873 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவியர்கள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் 2016-2017ம் கல்வி ஆண்டில் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) 1 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். (வருமானச் சான்றிதழ் ஃ ஓய்வூதியம் ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் (Affaidavit) ) அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். மாணவியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம், (Affidavit)  மற்றும் இதர விவரங்கள் www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர்ஃதாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக  The Secretary, Maulana Azad Education Foundation, (Ministry of Minority Affairs, Government of India) Chelms Ford Road, New Delhi – 110 155   என்ற முகவரிக்கு சேரும்வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும். காலக்கெடு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

2015-2016 ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள்  www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு உதவித்தொகை பெற அம்மாணவியர்கள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை உடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் தொடர்புடைய கல்வி நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

கல்வி உதவித்தொகை திட்டத்தில் சிறுபான்மையின மாணவியர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.