தீபாவளியையும் பிறந்தநாளும் கொண்டாடும் லாரன்ஸ் செய்த காரியம் தெரியுமா

0 6

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை இவருடைய முயற்சியில் 130 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது 131-வது குழந்தையாக பிரியங்கா என்ற குழந்தைக்கு தற்போது இருதய அறுவை சிகிச்சை ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரியங்கா பூரண நலத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, டாக்டர்களுக்கு ராகவா லாரன்ஸ் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுக்கு பிரியங்காவின் பெற்றோர்கள் மட்டுமில்லாது பலரும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை லாரன்ஸ்க்கு பிறந்தநாள், தீபாவளியும் பிறந்தநாளும் ஒன்றாக வருவதால் பிறந்தநாளை தவிர்த்துள்ள லாரன்ஸ் தனது அறக்கட்டளை பிள்ளைகளுடன் தீபாவளியை கொண்டாடுவதாக அறிவித்துள்ளார்..

இப்படியும் சில நடிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அங்குசம் இணையதளத்தின் அடுத்தபடைப்பு  நம்ம திருச்சி இதழ்… கிளிக் பண்ணி படிங்க

[ePaper class=aligncenter]

Leave A Reply

Your email address will not be published.