சின்னி ஜெயந்துக்கு மறுவாழ்வு கொடுத்த  சாட்டை பட இயக்குனரின் ரூபாய்..

0 14

பிரபு சாலமன் தயாரிப்பில் சாட்டை அன்பழகன் இயக்கும் ரூபாய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகிறார் சின்னி  ஜெயந்த். சின்னி ஜெயந்துக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது சாட்டை பட இயக்குநர் அன்பழகன் எடுக்கும் ரூபாய்..

8 வருடத்திற்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். எனக்கு மறுவாழ்வு கொடுத்தது ரூபாய் என்கிறார் சின்னி ஜெயந்த். மேலும் அவர் கூறியதாவது: அடிப்படையில் நான் ஒரு மிக்ரி ஆர்ட்டிஸ். எனது மேடை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மகேந்திரன் சார் கை கொடுக்கும் கை படத்தில் நடிக்க வைத்தார்.

முதல் படமே சூப்பர் ஸ்டாருடன்தான். அதன் பிறகு நூற்றுக் கணக்கான படத்தில் நடித்தேன். விஜய், அஜீத் அறிமுக காலங்களில் அவர்களது நண்பனாக நடித்தேன். எல்லா கலைஞர்களுக்கும் ஒரு சரிவு வரும். அது எனக்கும் வந்தது.

எனக்கு பட வாய்ப்புகளே இல்லை. ஏன் இல்லாமல் போனது என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் சினிமாவை நான் விடவில்லை. காரணம் எனக்கு சினிமா தவிர வேறெதுவும் தெரியாது.

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றுவது சினிமா நண்பர்களை சந்தித்து பேசுவது என என்னை சினிமாவோடு வைத்துக் கொண்டேன்.அந்த காத்திருப்பு, பொறுமையின் பலனாக கிடைத்ததுதான் ரூபாய் படம். ஒரு நாள் பிரபு சாலமன் போன் செய்து தம்பி அன்பழகன் ரூபாய் என்று ஒரு படம் இயக்குகிறான். அதில் ஒரு கேரக்டர் பண்ணிக்கொடுங்க என்றார். மறுநாள் ஆபீசுக்கு போனேன் அன்பழகன் கதை சொன்னார். அந்த கதையில் ஹீரோவுக்கு ஒரு நண்பன் கேரக்டர் இருக்கிறது. அதுதான் எனக்கு என்று நினைததேன். ஆனால் அப்புறந்தான் சொன்னார்கள் ஹீரோயின் அப்பா என்று. எனக்கு பெண் குழந்தைகள் இல்லை. ஆனந்தியை என் மகளாக நினைத்துக் கொண்டு நடித்தேன். ரூபாய் எனக்கு  மறுவாழ்வு தந்திருக்கிறது  என்கிறார் சின்னி ஜெயந்த்.

சாட்டை பலமாக பேசப்பட்டது அதுபோல் ரூபாயும் பேசும் என்கிறது படக்குழு.

அங்குசம் இணையதளத்தின் அடுத்தபடைப்பு  நம்ம திருச்சி இதழ்… கிளிக் பண்ணி படிங்க

[ePaper class=aligncenter]

Leave A Reply

Your email address will not be published.