தனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம் – துணைவேந்தர் முத்துகுமார்

0 8

தனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் கூறினார்.

ஆலோசனை மையம்

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல்துறை காஜாமலை வளாகத்தில் குடும்ப மற்றும் வளரிளம் பருவ ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் தலைமை தாங்கி, ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சுயபரிசோதனைfor-individual-introspection-it-is-vital-that_secvpf

எந்த படிப்பையும் இரண்டு விதமாக பயில வேண்டும். ஒன்று கல்விக்காக படிப்பது, மற்றொன்று துறைசார்ந்து படிப்பது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மின்சாரம் ஆகிய மூன்றும் தேவை. இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் மனநிலை வெகுவாக மாறிவிட்டது. காதல் என்றாலே நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது. பொருளாதாரத்தை பற்றியோ, கல்வியை பற்றியோ அவர்கள் சிந்திப்பதில்லை. அதுமட்டும் தான் வாழ்க்கை என்று இருப்பதால் தான் பல்வேறு கோளாறுகள் ஏற்படுகிறது. தனி மனிதனுக்கு சுயபரிசோதனை என்பது மிக அவசியம். நல்ல புத்தகங்களை படிப்பதும், நல்ல நண்பர்களோடு பழகுவதுமே நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கோபிநாத் கணபதி, மங்களேஸ்வரன், திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் ரமணிதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆலோசனை மையம் அமைப்பதின் தேவை மற்றும் நோக்கம் பற்றி மகளிரியல்துறை இயக்குனர் மணிமேகலை பேசினார். முடிவில் பேராசிரியை முருகேஷ்வரி நன்றி கூறினார்.

இந்த ஆலோசனை மையம் மூலம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்கு உட்பட்டவர்களுக்கும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களுக்கும், சுயதொழில் வாய்ப்புகள் என அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.