500 1000 ரூபாய் ரோட்டுகள் முடக்கம்.. மோடிக்கு ஐடியா கொடுத்தது இவரா

0 29

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை, ஏற்கெனவே சிவாஜி, பிச்சைக்காரன் படங்களில் தெரிவிக்கப்பட்டவை என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கூறிவருகிறார்கள். அதற்கான ஆதாரமாக சிவாஜி படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட யோசனையும் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.

அதனால்தான் அறிவித்த அடுத்த நொடி, இதற்கு ஆதரவு தெரிவித்து டிவிட்  செய்துள்ளார் போல.

திருச்சியில் முழு  அப்டேட் செய்திகளை சுமந்த   நம்ம திருச்சி இதழை  படிக்க :

nammtrichi 2 edition

Leave A Reply

Your email address will not be published.