அதிக பணத்தை டெபாசிட் செய்தால் ஆபத்து -அருண்ஜெட்லி ரெட் அலர்ட்

0 8


மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் என்னவென்பதை பொருத்து நாட்டின் வரிவிதிப்புச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.

நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் பணம் நேர்மையான வழியில் சம்பாதிக்கப்பட்டதாகவோ அல்லது சேமித்து வைக்கப்பட்டதாகவோ இருந்து அதற்கான கணக்குகள் சரியாக இருந்தால் நீங்கள் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை.

அதேவேளையில், கணக்கில்வராத பெருந்தொகையாக இருந்தால் சிக்கலே. விவசாயிகளின் சேமிப்புக்கோ, இல்லத்தரசிகள் சேமிப்புக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது. ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 போன்ற மக்களின் சிறு சேமிப்புகளை எளிதில் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

அரசின் நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள், லஞ்சப் பணத்தை சேர்த்து வைத்திருந்தவர்களே பாதிக்கப்படுவர்.

இனி மக்கள் தங்கள் வருமானத்தை கணக்கில் காட்டுவர் ஒழுங்காக வரி செலுத்துவர். இந்தியா இனி வரி செலுத்துவதில் அக்கறை கொண்ட மக்களுடைய நாடாக மாற்றம் பெறும். இது, இனிவருங்காலங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியும்கூட.
அரசின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிற்சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், கருப்புப் பணத்துடன் வாழ்வதைக் காட்டிலும் இந்த சிரமத்தை சில காலம் பொறுத்துக் கொள்வது நல்லதே. நேரடி, மறைமுக வரி வசூல் அதிகரிக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.