​8-ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சிசெய்யும் திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும்- தமிழக அரசு

0 21

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார்.
மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் விழா குழந்தைகள் தினவிழாவாக ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நேருவின் 128-வது பிறந்தநாள் விழா சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி, இளங்கோவன், ராமேஸ்வரமுருகன், கருப்பசாமி, பழனிசாமி மற்றும் இணை இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில்

பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் க.பாண்டிராஜன் கலந்து கொண்டு ஓவிய, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற 54 குழந்தைகளுக்கு ம் சிறந்த நூலகர்களுக்கும் பரிசுகளையும் விருதுகளையும் வழங்கிய அவர்,
தமிழகத்தில் தற்பொழுது அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெறும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.