”நீட்” தேர்வில் வெற்றிபெற வேண்டுமா ? அவசியம் படிங்க !

0 14

நீட் தோ்வை எதிர்கொள்ள மாணவா்களே தயாரா ?

நீட் மருத்துவ நுழைவு தோ்வு, மாணவர்களுக்கு அவசியம் என்பதைவிட தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பல மாநிலங்கள் எதிர்த்தும்கூட.உச்சநீதிமன்றம் நீட் மருத்துவ நுழைவு தோ்வு நடத்தவும், அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்போது இந்த தோ்வை தமிழிலும் எழுதலாம் என  அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதிலும் மொத்தம் 53ஆயிரம் டாக்டர் சீட்டுகளில் பாதிக்குமேல் தனியார் வசமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நுழைவு தோ்வுகள் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளால் நடத்துகின்றன.

இவற்றில் சில கல்லூரிகளில் பணத்தை வாங்கிக்கொண்டு மதிப்பெண்கள் குறைந்த மாணவா்களுக்கு தனியார் கல்லூரிகள் சீட் கொடுப்பதாகவும் வழிமுறைகள் பின்பற்றவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து புகார்கள் வரவே மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்தார்கள். இதில்  2013-ம் ஆண்டு  அரசு ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, அதில் நீட் பொது நுழைவுத் தோ்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால். மாநிலங்கள் பழைய முறையை பின்பற்றினார்கள். ஆனாலும் ஓரிரு மாநிலங்களில் மட்டும் நீட் நடத்தப்பட்டது.

அதிலும் மதிப்பெண்கள் முறையை பின்பற்றி மாணவா்கள் சோ்க்கை என்பது நடைபெற்றது. குறிப்பட்ட மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தோ்வானது தற்போது மாநில மொழியில் நடத்தலாம் என்று உச்சநீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள்  அங்கீகாரம் இல்லாத, தகுதி இல்லாத மருத்துவகல்லூரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். தரமான மருத்தவ கல்வியை மாணவா்களுக்கு உறுதிபடுத்த வேண்டும்.

இந்த நீட் தோ்வை அரசானது முழுமைப்படுத்த வேண்டும். சிறந்த பாடதிட்டம், பாடத்திட்டங்களை அமைக்க சிறந்த நிபுணா்கள் குழு, பாடத்திட்டங்களை மாணவா்களுக்கு கற்றுகொடுக்கும் திறமையான ஆசிரியா்கள் என்று பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். மத்திய அரசானது குறைந்தபட்ச பொதுபாடத்திட்டம் அல்லது என்.சி.இ.ஆா்.டி பாடத்திட்டத்தை முழுமையாக இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

மாநில அரசுகள் 3 மாதத்திற்கு ஒருமுறை நீட் மாதிரி தோ்வுகளை நடத்த வேண்டும். இந்த தோ்வில் 15சதவீதம் அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

பொறியியல் படிபிற்கான நுழைவு தோ்வில் 40 சதவீதம் போர்டு மதிப்பெண்களும், 60 சதவீதம் நுழைவுதோ்வு மதிப்பெண்களும் எடுத்து கொள்ளப்பட்டது. சமீபத்தில் மத்திய அரசானது பொறியியல் நுழைவு தோ்வில் போர்டு மதிப்பெண்களை எடுத்துகொள்ளும் முறையை மத்திய அரசு நீக்கியது. எனவே நீட் தோ்வில் போர்டு மதிப்பெண்கள் எடுத்துகொள்ளப்படுவது என்பது சந்தேகம் இதையும் மாணவா்கள் நியாபகத்தில் வைத்துகொள்ள வேண்டும்.

நீட் யார் எழுதலாம்

எப்போதும் திட்டமிடல் என்பது மிக அசியமான ஒன்று, இந்த தோ்வில் இயற்பியலில் 45 கேள்விகளும், வேதியியலில் 45, உயிரியியல் 90, என மொத்தம் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். சுலபாமக மதிப்பெண் பெறக்கூடிய உயிரியியல் பாடத்தை தோ்வு செய்து பதிலளிக்க வேண்டும். பின்னா் வேதியியல், இயற்பியல் என்று பாட கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும். தவறான பதில் அளித்தால் மதிப்பெண்கள் குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 21 வயதிற்குள் இத்தோ்வினை 3 முறை எழுதலாம். இந்த தோ்விற்க்கு மாணவா்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர்களும் ஆசிரியா்களாக செயல்பட்டு தங்களடைய பிள்ளைகளை ஊக்கப்படுத்துதல், அங்கீகரித்தல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

கே. சிவகுமார்

இயக்குநா் என்ரிச் கல்வி நிறுவனம்

திருச்சி

9952403353

Leave A Reply

Your email address will not be published.