உலக வில்வித்தை போட்டியில் திருச்சி இளங்கோ !

0 43

உலக வில்வித்தை போட்டியில் திருச்சி இளங்கோ.

திருச்சி மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும் நாகராஜன்-அனுராதா ஆகியோரின் மகன் இளங்கோ, திருச்சி ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகளில் படித்தார். அப்போது அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமானது. இப்போது  திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்றுவரும் இவர்,

சிறுவயதில் இருந்தே, துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் உண்டானது. அது இப்போது வில்வித்தை போட்டியில் பரிசுகளை வெல்ல உதவுகிறது.

இளங்கோ இதுகுறித்து

,

?????????????

இதுவரை வில்வித்தைப் போட்டியில் 30,50,70 மீட்டர் போட்டிகளில் மாவட்டம் மாநிலம் தேசிய மற்றும் சர்வ தேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளேன். திருச்சி மாவட்ட வில்வித்தைச் சங்கம் நடத்திய போட்டிகள், தமிழ்நாடு வில்வித்தைச் சங்கங்கள் 2014 முதல்  இந்த ஆண்டு வரை நடத்திய அனைத்து போட்டிகளிலும், மாணவ ஒலிம்பிக் சங்கம் தேசிய அளவில் மும்பை (2015) மற்றும் சோலாபூர் (2016) ஆகிய இடங்களில் நடந்த  அனைத்து போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளேன்.

அகில இந்திய பல்கலைக்கழக வில்வித்தை போட்டியில் பங்கேற்று தனிவரிசைப் பட்டியலில் இடம் கிடைத்தது. 2015 ஆசிய மாணவ ஒலிம்பிக் சங்கம் பூடான் நாட்டில் நடந்ந்த தெற்கு ஆசிய விளையாட்டுப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன்.  இதுவரை பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2016 தேசிய ஊரக விளையாட்டுப்போட்டியில்  என  8முறை மாநில அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் முதலிடமும் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டிகளில் 3முறை முதலிடமும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளேன். எனக்கு  எங்க கல்லூரி நிர்வாகமும், பயிற்சியாளர் திரு. ராஜதுரையும் கொடுத்த ஊக்கம்தான் என்னை இந்தளவுக்கு முன்னேற்றியுள்ளது. தற்போது 2017-ல் உலக வில்வித்தைப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறேன். நிச்சயம் இந்தியாவுக்கும் நம்ம ஊருக்கு பெருமை சேர்த்து கொடுப்பேன் என்றார் நம்பிக்கையுடன்.

சாதிக்க துடிக்கும் இளைஞரான இளங்கோவை நம்ம திருச்சி இதழ் வாழ்த்துகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.