பாட்டில் கார்டன் ! அசத்தும் திருச்சி கல்லூரி மாணவர்கள் !

0 2

பாட்டில் கார்டன் !  அசத்தும் திருச்சி கல்லூரி மாணவர்கள் !

நவநாகரீக உலகில் உணவகத்திற்கு செல்லும் போது நெகிழி புட்டிகளை நோக்கியே கைகள் நீழ்கின்றது.

இந்த நுகர்வு கலாச்சாரம் ஆபத்தானது இதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா , துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி உள்ளிட்டோர் ஆலோசனைப்படி நெகிழி பை மற்றும் பாட்டில் பயன்பாட்டினைத் தவிர்க்க வேண்டுமென்றும், அப்படி பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட நெகிழி பாட்டில்களை கொண்டு மக்கள் பயனடையும் வகையில் கார்டன்  அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தை உயிர் தொழிற்நுட்பவியல் துறை சார்பில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு, துறைத் தலைவர் முனைவர் திருமலைவாசன் மேற்பார்வையில் பத்தடியில் பாட்டில் கார்டன் தயாரானது.

பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட குடிநீர்,மருந்து மற்றும் மென்பான நெகிழிப்பாட்டில்களை படுக்கை வசத்தில் வைத்து செவ்வக வடிவில் வெட்டி மண் இடப்பட்டது.

மண்ணில் சிறு மற்றும் குறு வகைத் தாவரங்கள் நடப்பட்டு பந்தல் அமைத்து கம்பியில் பாட்டிலை கட்டப்பட்டும், ஆறுமூங்கிலைக் கொண்டு அழகான பாட்டில் கார்டனையும் உருவாக்கினார்கள். நீர் தெளிப்பான் மூலம் வாரத்திற்கொரு முறை நீர் தெளிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில் அத்தாவரங்கள் வளரத்தொடங்கி பூக்களும் பூக்கத் துவங்கியது. தற்போது பாட்டில் கார்டனில் பட்டாம் பூச்சியும் பறந்து வருவது அழகு. பாட்டில் கார்டன் பராமரிப்பு எளிது. தேவைக்கேற்றார் போல் இடமாற்றமும் செய்துக் கொள்ளலாம்.

மண் தரை இல்லையென்ற கவலையும் தேவையில்லை. காங்கிரீட் கட்டிட பால்கேனியிலும் பாட்டில் கார்டன் அமைக்கலாம் என்றனர் ஆண்டவன் கல்லூரி உயிர் தொழிற்துட்பத் துறை மாணவர்கள் .

வெற்றி

Leave A Reply

Your email address will not be published.