திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் திருச்சி மாணவி முதலிடம் !

0 58

மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆண்டவன் கல்லூரி மாணவி முதலிடம் .காந்திமதி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான திருக்குறள் போட்டி கோவையில் நடைபெற்றது.13,200 நபர்கள் போட்டியில் பங்கேற்றார்கள்.

அதில், 133 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறளினை 53 நிமிடங்கள் 32 விநாடிகளில் ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இயற்பியல் துறை முதலாம் ஆண்டு இளங்கலை மாணவி சத்யா முதலிடம் பெற்றார்.

கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி ,முனைவர் ஜோதி, இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் கர்ணன் உள்ளிட்டோர் வெற்றிப் பெற்ற மாணவி சத்யாவை பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.