மண்புழு உரத் தயாரிப்பில் திருச்சி கல்லூரி மாணவர்கள் !

0 54

மண்புழு உரத் தயாரிப்பில் மாணவர்கள் .

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை சார்பில் மாணவர்கள் மண்புழு உரம் தயாரிக்கின்றனர்.

திடக் கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவு பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டையாக வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம்.


இதில் தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாட்களில் மண்புழு உற்பத்தியாகி விடுகிறது. மண்புழுக்களில் 3000 வகைகள் உள்ளன. இந்தியாவில் 384 வகைகள் உள்ளன .

இதில் எய செனியா பெடிடா, எய செனியா ஆன்ட்ரி மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ் உள்ளிட்ட மண்புழுக்களை உரம் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

மண்புழு உரம் தயாரிக்க தொட்டி ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரை அடி ஆழ்த்திற்கு குழி வெட்டி சுற்று சுவர் அமைக்க வேண்டும். அக்குழியில் மண்ணைப் பரப்பி மக்கும் பண்ணைக் கழிவுகளான இலை, தழைகளை போட்டு அதன் மேல் ஈரமான சாணத்தை கரைத்து ஊற்றி மண்புழுவை விடவும்.மூன்று நாட்களுக்குப் பிறகு செங்கற்களை 2 அங்குலம் இடைவெளி விட்டு அடுக்கவும்.

புழுக்கள் செங்கற்களின் அடியில் தங்கி கழிவுகளை உண்டு எச்சங்களை வெளியேற்றும்.
அதுவே மண்புழு உரமாகும்.

கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா , துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி, துறைத் தலைவர் முனைவர் கவிதா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் மண்புழு தயாரிக்கின்றனர் இயற்கையின் நண்பர்களாக.

வெற்றி

Leave A Reply

Your email address will not be published.