சோய் க்வாங் டோ போட்டியின் திருச்சியின் பதக்க மங்கை !

0 3

சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டி

சோய் க்வாங் டோ தற்காப்பு கலை போட்டியில் சாதனை படைக்கும் வீராங்கனை .ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை மாணவி டினோதா சோய் க்வாங் டோ தற்காப்பு கலை  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார். டினோதா பள்ளி பயிலும் காலந்தொட்டே தற்காப்பு கலையினை பயின்று வருகிறார்.

2014 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன் போட்டியில் 69 கிலோவிற்கு மேற்பட்ட எடை பிரிவு போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2014 – 2015 இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு SGFI (school games federation of India) 2014-2015  ஆம் ஆண்டு 60வது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அரசு  சோய் க்வாங் டோ வீராங்கனையாக ராஜ்பூர், சட்டிஸ்கரில் நடந்த பெண்களுக்கான 19 வயதிற்குட்பட்டோரில் 69 கிலோவிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2015- 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் ரூப் நகரில் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 61 வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டியிலும் தமிழக வீராங்கனையாகப் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் .2016 ஆம் ஆண்டு நாமக்கல் புதுப்பட்டியில் நடைபெற்ற 6 வது தமிழ்நாடு  சோய் க்வாங் டோ போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பதக்கம் வென்ற தற்காப்புக் கலை வீராங்கனை டினோதாவை கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா , துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி ,முனைவர் ஜோதி , உடற்கல்வி இயக்குநர்கள் கருப்பையா மற்றும் பிருந்தா உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

-வெற்றி

Leave A Reply

Your email address will not be published.