எனது தோல்விதான்… பலரை ஜெயிக்க வைத்தது ! – சக்ஸஸ் பார்முலா!

0 19

எனது தோல்விதான்… பலரை ஜெயிக்க வைத்தது…  உருகும்

என்.ஆர் ஐ.ஏ.எஸ் ஆகாடமி நிறுவனர் விஜயலாதன்

சாதனையாளர்கள் பலரும் தோல்வியில் இருந்து மீண்டவர்கள்தான். கடந்த காலங்களில் தோல்வியால் தான் அடைய முடியாத  இடத்தில் பலரை உருவாக்கி அழகு பார்ப்பவர் திருச்சி என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் விஜயலாதன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்தான் இவருக்குசொந்த ஊர் என்றாலும் இப்போது  தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நிற்கும் திருச்சி வி.ஐ.பிகளில் ஒருவர். நம்ம திருச்சி இதழின் சாதனையாளர்கள் சக்ஸஸ் பார்முலா பகுதிக்காக  விஜயலாதனை  நேரில்  சந்தித்தித்தோம்..

“அப்பா விவசாயி, அதனால் என்னை விவசாயம் படிக்க வைத்தார். கடந்த 1998 -ம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் துறை தோ்வு செய்து படித்துமுடித்தேன். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டு, கடந்த  2001ல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி வேளாண்மை  முடித்தேன். இடையே எம்.ஏ வரலாறு தொலைதூர கல்வியில் பயின்றுகொண்டே, டெல்லியில் தங்கி 2001 முதல் 2003 வரை இந்திய ஆட்சி பணிக்காக என்னை தயார் செய்து கொண்டிந்தேன்.

விவசாயம் படித்த என்னை அப்பா என்.ரத்தினசாமி எப்படியாவது நான் கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைபட்டார். நானும் விடாமல் படித்தேன் ஆனால் அவருடைய ஆசையை என்னால் நிறைவேற்ற முடியல.

சரி இனி கலெக்டர் கனவு பலிக்காது எனும் நிலையில் வீடு திரும்பினேன். ஊருக்கு வந்த கொஞ்சநாள் ரொம்ப கவலையாக இருந்தது.

அந்த தோல்வி எனக்கு பாடத்தை கற்கொடுத்தது நாம் கற்று கொண்ட பயிற்சிகளை கொண்டு நாம் ஏன் மற்றவா்களுக்கு பயிற்சி கொடுக்க கூடாது என தோணுச்சு.

நல்லா யோசித்து திருச்சியை தேர்ந்தெடுத்தேன். கடந்த 2003 -ம் ஆண்டு நவம்பா் மாதம் திருச்சி தில்லை நகர் 3வது கிராஸில் 50 மாணவா்களுடன் எனது தந்தையின் இன்ஸியல்களை சுருக்கி என்.ஆர் எனும் பெயரில் துவங்கிய என்னுடைய பணி, 10வது கிராஸ், சாஸ்திரி ரோடு, என்று கொஞ்சம் கொஞ்சமாக வளா்ந்து இன்று கலைஞா் அறிவாலயம் அருகில் சொந்தமாக கட்டிடங்களை கட்டி தற்போது என்.ஆா்.ஐஏஎஸ் அகாடமியை வளா்த்துள்ளேன்.
இன்று 3ஆயிரம் மாணவா்கள் படித்து வருகிறார்கள்.

இதுவரை 13 ஆண்டுகளில் 9ஆயிரத்திற்க்கும் அதிகமான அரசு அதிகாரிகளை உருவாக்கியுள்ளேன். அதில் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.

என்னுடைய தோல்வியை அவா்கள் மூலம் வெற்றியாக்கி கொண்டேன்.

அப்பா ஒரு ஓய்வு பெற்ற பொதுபணித்துறை அலுவலா் அம்மா விமலா வீட்டு நிர்வாகம் பார்த்தார். அப்பாவுக்குத்தான் நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதைவிட அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பும் இருந்தது. என்னுடைய தோல்வி அவருக்கு பெரும் வருத்தத்தை தந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். ஒருவேலை அவா் உயிரோடிருந்தால் என்னை பார்த்து சந்தோஷபட்டிருப்பார்.

இன்று நான் 9ஆயிரம் குடும்பங்களை வாழ வைத்துள்ளேன்.

மாணவா்களுக்கு நான் சொல்வது ஒன்று தான் இதுபோட்டி நிறைந்த உலகம் உன்னுடைய அலட்சிய போக்கு ஆபத்தை சந்திக்க வைக்கும் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நீ வெற்றிபெற தகுதியானவன் என்பதை மறக்காதே என்பேன்.

இந்திய ஆட்சி பணிக்கான படிப்பு என்பது தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி அமைத்துள்ளேன். இப்போது திருச்சியை தலைமையிடாமாக கொண்டு சென்னை, மதுரை, மயிலாடுதுறை, கும்பகோணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களுடைய கிளையை துவங்கி உள்ளேன்.

இந்த கல்வி நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு விழாவில் தமிழக கவனா் ரோசய்யாவை அழைத்து ஒரு மாபெரும் பாராட்டு விழா நடத்தினோம். அதேபோன்று ஒவ்வொரு வெற்றியாளா்களுக்கும் எங்களுடைய பாராட்டுகளை நாங்கள் கொடுத்து கொண்டே இருக்கின்றோம்.

வருகின்ற 26ஆம் தேதி விஏஓ தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளவா்களுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம் என்று தன்னுடைய வெற்றியை பகிர்ந்து கொண்டார். பலசாதனையாளர்களை உருவாக்கும் அவருக்கு நம்ம திருச்சி இதழின் வாழ்த்துக்கள்.

உங்கள் தோல்வி இன்னும் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஏணியாகட்டும்.

ஞா.குமரன்.

Leave A Reply

Your email address will not be published.