சமூக அறிவியல் புள்ளி விவர தொகுப்பு கருத்தரங்கு !

0 17

சமூக அறிவியல் புள்ளி விவர தொகுப்பு குறித்த பயிற்சி பட்டறை.

ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் சமூக அறிவியல் புள்ளி விவர தொகுப்பு குறித்த ஒரு நாள் மாநில அளவிலான பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வணிகவியல் துறை தலைவர் முனைவர் மெஹராஜ் பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி துவக்க வுரையாற்றினார். முனைவர் ஜோதி வாழ்த்துரை வழங்கினார்.

திண்டுக்கல் பிஎஸ்என் ஏ பொறியியல் தொழிற்நுட்ப கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் மகேஷ் நன்றி கூறினார்.பயிற்சி பட்டறையில் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.