உருளை மூலம் உரம் உற்சாகத்தில் மாணவர்கள் !

0 17

உருளை மூலம் உரம் உற்சாகத்தில் மாணவர்கள் !

ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி உயிர் தொழிற் நுட்பவியல் துறை மாணவர்கள் உருளை மூலம் உரம் தயாரித்து வருகிறார்கள். பிளாஸ்டிக் உருளையினை படுக்க வசத்தில் வைக்குமாறு வடிவமைத்து கொள்ள வேண்டும்.

படுக்கை வசத்திலேயே கழிவுகளை கொட்ட உருளையில் செவ்வக வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும் -வீட்டில் பயன் படுத்திய பின் உள்ள காய்கறி கழிவுகள் மற்றும் மக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் உருளையில் போட்டு நீர் தெளித்து வாரம் ஒரு முறை உருளையினை சுழற்றி வைக்கவும். 30 நாட்களில் இயற்கை உரம் தயார் செய்யலாம் .

உணவு கழிவுகளிலும் உருளை மூலம் உரம் தயாரிக்கலாம் என இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் கணேஷ், பிரஜ் முகமது உள்ளிட்ட மாணவர்கள் உற்சாகமாக கூறுகிறார்கள்.

கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி, துறைத் தலைவர் முனைவர் திருமலைவாசன் உள்ளிட்டோர் மாணவர்களின் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.