சாண எரிவாயு தயாரிப்பில் சாதிக்கும் மாணவர்கள் !

0 19

சாண எரிவாயு தயாரிப்பில் சாதிக்கும் மாணவர்கள் .

ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி உயிர் தொழிற்நுட்பவியல் துறை மாணவர்கள் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி ,முனைவர் ஜோதி , துறைத்தலைவர் முனைவர் திருமலைவாசன் உள்ளிட்டோர் வழிகாட்டுதல் படி சாண எரிவாயு தயாரிப்பில் சாதித்து வருகிறார்கள்.

1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் மாட்டு சாணகரைசல் உணவுக் கழிவு, சம அளவு நீர் கலந்து சோடியம் ஹைட்ராக்சைடு கலக்க வேண்டும்.

மேற்கண்ட கழிவுகளை  மெத்தினோ ஜீனோசிஸ் பாக்டிரியா மக்க வைக்கிறது. அதிலிருந்து மீத்தேன் உள்ளிட்ட பிற வாயுக்கள் உற்பத்தியாகின்றன. அப்படி உருவாகும் வாயுவினை நீர் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது . நீரில் கரையக் கூடிய வாயுக்கள் கரைந்து விடும்.

கரையாமல் உள்ள மீத்தேன்  எரிவாயுவாக பயன் படுகிறது எனவும் , 50 கிலோ சாணக் கழிவினால் 2 மணி நேரத்திற்குரிய எரிவாயு வினை தயாரிக்க முடியும் என சாணஎரிவாயு தயாரிப்பில் சாதித்து வரும் இளங்கோ, ஸ்ரீராம் உள்ளிட்ட மாணவர்கள் கூறுகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.