காங்கிரீட் காய்கறித் தோட்டம் கலக்கும் கல்லூரி மாணவர்கள்.

0 25

காங்கிரீட் கட்டிடங்களில் காய்கறித் தோட்டம்

கலக்கும் கல்லூரி மாணவர்கள் .

ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர்கள் முனைவர் பிச்சை மணி, முனைவர் ஜோதி, துறைத் தலைவர் கவிதா உள்ளிட்டோர் ஆலோசனையில் காங்கிரீட் கட்டிடங்களில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்கள்.

பாபிலோன் தொங்கும் தோட்டம் போல் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் சிறு தோட்டம் அமைக்க வேண்டும் என எண்ணம் இருக்கும். காங்கிரீட் கட்டிடம் உள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைக்கலாம். மாடிதோட்டம் அமைத்தால் தமிழக அரசிடம் 50 சதவீதம் மானியமும் பெறலாம்.

தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகள், உரங்கள் , பாலீத்தின் பைகள், 2கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலித்தீன் பைகள், 9வகை காய்கறிகளின் விதைகள், 6 வகை உரங்கள், மண்வெட்டி, களைக் கட்டு , நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுக்கள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உட்பட மாடித் தோட்டம் அமைக்க அனைத்து பொருட்களையும் குறைந்த கட்டணத்தில் தமிழக அரசு வழங்குகிறது.

மேற்கண்ட பொருட்களை கொண்டு பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி விதைகள் விதைத்து உரமிட்டு நீர் தெளித்து வளர்க்கலாம். தோட்டம் மீது பந்தல் அமைத்து கொள்ளலாம்.

காணி நிலமில்லாவிட்டாலும் காங்கிரீட் காடுகளாக உள்ள கட்டிடங்களிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கலாம் என்கின்றனர் கல்லூரி மாணவர்கள் .

Leave A Reply

Your email address will not be published.