இதுதான் சரியான நேரம்…. தலைவா தலைமை ஏற்க வா.. ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் திருச்சி ரசிகர்கள்.

0 36

இதுதான் சரியான நேரம்…. தலைவா தலைமை ஏற்க வா.. ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் திருச்சி ரசிகர்கள்.

ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராகவும், சசிக்கலா அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அவர் முதல்வராக  முயற்சி செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டுக்காக வெடித்த மாணவர் போராட்டம் என அடுத்தடுத்த பரபரப்பில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்த அரசியல் நெருக்கடி சூழலில் உண்டாகி உள்ள நிலையில் இதுதான் சரியான நேரம், நடிகர் ரஜினி தலைமை ஏற்றால் தமிழகம் தலைநிமிரும் எனக்கூறி, ரஜினியை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் வேலைகளைத் துவங்கி உள்ளார்கள் திருச்சி நசிகர்கள்.

திருச்சி மட்டுமல்லாமல் தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள் தொண்டர்கள் இருக்கிறோம் என, நாளைய முதல்வராக நடிகர் ரஜினி வரவேண்டும் என கடந்த சில வாரங்களுக்கு முன் போஸ்டர் ஒட்டினார்கள். அடுத்து  இப்போது, மக்களாட்சி மலரட்டும் இனி தொடரட்டும் உனது ஆட்சி, நேற்று ஜெயலலிதா, இன்று பன்னீர் செல்வம்,நாளை ரஜினி முதல்வர் என திருச்சி மாவட்ட ரஜினி தள பொறுப்பாளர் ராயல் ராஜு தலைமையிலான ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினார்கள்.

ராயல்ராஜி மட்டுமல்லஆல், திருச்சி ரஜினியின் தீவிர ரசிகர்களாக அபூர்வா மணி, சாகுல் ஹமீது உள்ளிட்டோர் ரசிகர்களிடம் ஆலோசனை நடத்தி அரசியலுக்கு ரஜினி வந்தால், நிச்சயம் நல்லது நடக்கும்  என தீர்மானம் போட்டுள்ளார்கள்.

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ராயல் ராஜு,

“தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை.  இப்போது தி.மு.கவினர் ஸ்டாலினும், அ.தி.மு.கவில் ஒரு சிலர் சசிகலாவும், ஒரு சிலர் தீபாவும், முதல்வராக வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர் ரஜினி மட்டுமே. தலைவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தை போஸ்டர் அடிச்சி தெரிவிக்கிறோம். அவர் அரசியலுக்கு வந்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தானாக நிரம்பும். தலைவருக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு. அவர் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்.

தமிழகத்தில் புரையோடி உள்ள லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராகத் தலைவர் ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம். அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்,” என்கிறார்.

இந்த போஸ்டர்கள் ஒட்டியபிறகு, ராயல் ராஜு சென்னையில் உள்ள ரஜினி இல்லத்துக்கும் சென்று வந்துள்ளார். இந்தப் பரபரப்பு கிளம்பிள்ள நேரத்தில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா கெய்வாட், ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என அறிவித்தார். ஆனால் ரஜினி குடும்பம் கொஞ்சம் அமைதியாகவே உள்ளது.

ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம் என ரஜினி பேசிய பேச்சும், மாணவர்கள் போராட்டத்தை வாழ்த்தியதும், மாணவர்கள் போராட்டத்தை உடனே கைவிடவேண்டும் என்ன தலைவர்களுக்கு முன்னாலேயே அறிவிக்க வெளியிட்டதும் ரஜினிக்கு தமிழக மக்கள், மாணவர்கள் மீது உள்ள அக்கறையைக் காட்டுகிறது என்கிறார்கள் ரஜினி வட்டாரங்கள்.

ரஜினியை ரசிகர்கள் அரசியலுக்கு அழைப்பது இன்றல்ல.. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அழைத்து வருகிறார்கள். இப்போது மீண்டும் ரஜினியின் அரசியல் பற்றிய பேச்சுகள் கிளம்பியுள்ளன.

ரஜினி என்ன முடிவெடுக்கிறாகள் எனப் பார்ப்போம்

பிரியதர்சன்

 

Leave A Reply

Your email address will not be published.