மோசே இல்லம் 91 பெண் குழந்தைகள் யார் ? விளக்கும் கிதியோன் ஜேக்கப் !

0 8

91 பெண் குழந்தைகள் யார் ? விளக்கும் கிதியோன் ஜேக்கப் !

அநாதை குழந்தைகள் வெளிநாட்டிற்கு கடத்தல், 130 குழந்தைகளுக்கு மேல் இருந்தார், எயிஸ்ட் நோயினால் குழந்தை இறப்பு, பணத்திற்காக குழந்தைகளை வெளிநாட்டில் ஆடவைக்கிறார்கள். என கடந்த சில மாதங்களாக திருச்சியில் உள்ள மோசே காப்பகத்தை பற்றி பரபரப்பாக தினசரி, மற்றும் வார இதழ்களில் வெளிவந்து அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக வழக்கு குறித்து கிதியோன் ஜேக்கப் நம்ம திருச்சி இதழுக்கா பேசிய போது….

மோசே மினிஸ்ட்ரிஸ், இதன் ஆரம்பம் 1994! இந்தியா மற்றும் அகில உலகம் எங்குமுள்ள செய்திதாள்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள், இந்தியாவில் குறிப்பாக உசிலம்பட்டியில் நடைபெற்ற பெண் சிசுக்கொலை பற்றிய பக்கம் பக்கமா எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அந்த காலகட்டத்தில்  தெரு வீதிகளில் அகிகமான ஆண் குழந்தைகளையும், சில பெண் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்க முடியும். கொடுமையான பட்டினி, கழுத்தை நெரித்தல், தலையனையால் அமுக்கி, விஷம் (எருக்கம்பால்) அல்லது நெல் கொடுத்து தொண்டை குழாயை அடைத்து  பெண் குழந்தைகள் கொல்வதையே வழக்கமா கொண்டிருந்தார்கள்.

புதிதாய் பிறந்த பெண் குழந்தைகளை புறக்கணிக்கும் அனைத்து பெற்றோர்களும் எங்களை எளிதாய் அணுகும் பொருட்டு, நகரத்தின் மையத்தில், அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். “கொலை செய்யாதீர்” என்ற தலைப்பை கொண்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு உசிலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் விநியோகித்தோம்.

குழந்தைகளை கொல்ல மனசில்லாதவர்கள்  பெண் குழந்தைகளை எங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து சோ்த்தனா். இதில் முதல் பெண் குழந்தை, சாரா. அடுத்தடுத்து குழந்தைகள் வந்து கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியே  சுமார் 4 ஆண்டிற்குள் 91 பெண் குழந்தைகள் எங்களிடம் தஞ்சம் அடைந்தார்கள்.

அதில் 2 குழந்தைகள் மிகவும் கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக விமானத்தில் எல்லாம் அழைத்து சென்று இந்த உலகில் எவ்வளவு பெரிய உச்சகட்ட மருத்தும் பார்க்க முடியுமோ அவ்வளவு மருத்தும் பார்த்தும்    தீவிர சிகிச்சை பலனின்றி இறந்து போயின. அதன் பிறகு மீதமுள்ள 89 குழந்தைகளையும் மிகவும் கண்ணும் கருத்துமாக என் மகளை போன்று வளர்த்து வந்தேன்.

சிறு பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட தொடங்கினர். உசிலம்பட்டியில் இடப்பற்றாக்குறை காரணமாக நாங்கள் திருச்சியில் நல்ல வசதி கொண்ட இடத்தை நோக்கி  இடம் பெயர்ந்தோம். அவா்களுக்கு உரிய பொதுவான கல்வியை தரமான பள்ளிகளில் கொடுத்து, விளையாட்டு, கைவினைகள், ஆங்கிலம், ஹிந்தி தட்டச்சு, சமையல் கலை மற்றும் தையல் போன்றவற்றிலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை கொடுத்தேன்.

யாருடைய வற்புறுத்தலுக்கு இல்லாமல் இறையியல், கல்வியியல் மற்றும் மற்ற தொழில் சார்ந்த படிப்புகளில் புலமையடைவதற்காக விருப்பத்தை தெரிவித்தபோது அவர்களுக்காகவே சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளேன்.

இச்சூழ்நிலையில்தான் இதை பொறுக்கமுடியாத சில விஷமிகளின் தூண்டுதலினாலும், தவறான பிரச்சாரங்களினாலும், ஊடகங்களுக்கு தவறான செய்திகளை கொடுத்தும் இந்த மோசே மினிஸ்ட்ரிஸ்க்கும் எனக்கும் எதிராக வழக்குகளை தொடுத்தும், கடந்த 18 மாதங்களாக பல கஷ்டங்களை நானும் என் பிள்ளைகளும் அனுபவித்து வந்தோம். பலவிதமான கற்பனையான குற்றசாட்டுகளை என் மீதும் என்னுடைய பிள்ளைகள் மீதும் கூறப்பட்டது. நாங்கள் பிரிக்கப்பட்டோம். மிகவும் கொடுமையாக அசிங்கமாக சித்தரிக்கப்பட்டோம். இத்தனையும் மீறி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு பெண்களுக்கு திருமண மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஏதோ 130 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்ததாகவும், அவர்கள் பலரை கொன்றுவிட்டதாகவும், ஓமனுக்கு கடத்திவிட்டதாகவும், ஜெர்மன், போலந்து அழைத்து சென்று விபசாரத்திலும் பிச்சை எடுக்கவும் உபயோகியபடுத்தியதாகவும் கற்பனைகளையும் மிஞ்சும் குற்றசாட்டுகள், பொய் வழக்குகள் தொடரப்பட்டது.

நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என் உள்ளத்தின் குமுறலை பகிர்ந்துகொள்கிறேன்.

சில யதார்த்தமான உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் வரையிலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக உசிலம்பட்டி பகுதியிலிருந்து தங்கள் குழந்தைகள் காணவில்லை என்று எந்த பெற்றோரோ, கடத்தப்பட்டதாகவோ யாரும் எந்த புகாரும் கொடுக்கவில்லை.

திருச்சியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த இல்லத்தைதை பற்றி தெரியும், இதை அவர்கள் வந்து பார்வையிட்டுள்ளார்கள், அவர்களால் பலமுறை இந்த இல்லம் எழுத்து பூர்வமாய் மாவட்டத்தில் சிறந்த இல்லமாக பாராட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் (பத்து பேர் மட்டும்) ஜெர்மனி மற்றும் போலந்துக்கு உள்ளூர் அதிகாரிகளின்  முழு ஆதரவுடனும், மற்றும் அனுமதியோடு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

அந்நாளில்  இருந்த DSWO, என்னை காப்பாளராக அங்கீகரித்ததினால்  அக்குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்தியா அல்லது ஜெர்மனி அல்லது போலந்தில், ஆண்கள் மூலம் தொந்தரவு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற புகாரை எந்த பிள்ளைகளும் இதுவரை கொடுத்ததில்லை.

ஜெர்மனி மற்றும் போலந்து பயணங்களில் அனைத்து பெண்களும் இந்திய இணை ஊழியர்கள் தங்கும் இடங்களில் தங்கியிருந்தனர்.

பிள்ளைகள், இந்நாள்வரையிலும் காசுக்காக நடனம் ஆடுனது இல்லை. பொதுவாக என் பிள்ளைகளை 12 வயதிற்கு பின்பு பொது இடங்களில் நடனம் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. என்றார்..

[toggle title=””தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்”” state=”open” ]வாட்சப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் குழந்தைகளுக்கு “தடுப்பூசி போடத் தேவையில்லை அதுஒரு பன்னாட்டு சதி” என்ற கோணத்தில் முழு மூடத்தனமாக விசமக் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்பவர்கள், அடடே உண்மைதான் போல் இருக்கு என நினைத்து அதிகமாக வாட்சப்பிலும் முகநூலிலும் நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். அதற்கு இதை படிங்க : “தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்” : http://angusam.com/2017/01/30/immunize-and-protect-your-child/[/toggle]

Leave A Reply

Your email address will not be published.