விவசாயிகளுக்காக திருச்சி டூ சென்னை நடைபயணம் விழித்த இளைய தலைமுறையினர்.

0 34

விவசாயிகளுக்காக திருச்சி டூ சென்னை நடைபயணம்

போராடும் இளைய தலைமுறையினர்..

திருச்சி to சென்னை விவசாயிகளுக்கான 5 நாள் நடைபயணம்

திருச்சி நீதிமன்றம் அருகே அமைந்திருந்த போரட்டக்களத்தில் இருந்து 19-01-17 அன்று மதியம் 2-00 மணி அளவில்நாங்கள் திரு .மனோஜ தர்மர்  மற்றும் திரு நேதாஜி இளவரசன் ஆகியோர் சென்னை நோக்கி 15 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்திநடைபயணம் மேற்கொண்டோம் . அன்றைய தினம் சமயபுரம் அருகே உள்ள கடை ஒன்றில் ஓய்வுஎடுப்பதற்க்காக நின்றோம் எங்கள் கைகளில் இருந்த வாசகங்களை பார்த்த கடைக்காரர் நடைபயணம் குறித்தகோரிக்கைகளை கேட்டு அதில்  இருந்த மரங்களை வளர்த்தல் ,வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை  என்கிறவாசகத்தை பார்த்து இன்றிலிருந்து நான் அதை செய்கிறேன் என்று எங்கள் பயணத்திற்கான பலனை கேட்ட போதுசந்தோஷம் அமைந்தோம். இரவு  நாங்கள் இருவரும் கோணலை பேருந்து நிலையத்தில் தங்கினோம்

 

நாள் -2

 (20-01-17) அன்று இரண்டு பேருடன் தொடங்கிய எங்கள் பயணம் மூன்று நபர்களாக மாறியது திருச்சியில் இருந்துதிரு.கண்ணன் என்ற நண்பரும் எங்களுடன் கலந்துக்கொண்டார் . பெரம்பலூர் போராட்ட குழுவினர்  எங்களை வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள். அன்று மழை பெய்தால் பெரம்பலூரிலே தங்கினோம்.

நாள் 3

21-01-17 நாள் காலை மூன்று பேருடன் ஆரம்பித்த பயணம் பண்ருட்டியில் இருந்து வருகை தந்த திரு.வினோத் மற்றும்திரு.மணிவேல் ஆகியோர் இணைத்தனர் ஏற்கனவே இருந்த மூவர் உடன் இருவர் இணைந்து ஐவராக மாறிய எங்கள்பயணத்தில் இன்னும் சிறிது தூரத்தில் திருச்சியில் இருந்து மேலும் திரு.அன்புதாசன் மற்றும் திரு.தமிழ் இனியன் என்றஇரு நண்பர்கள் இணைந்து ஏழு பேர் கொண்ட குழுவாக பயணம் செய்தோம் இந்த நடைபயனகுழு *கழுதூர்* என்ற ஊரில்உள்ள சில இளைஞர்கள் சிலருக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். பின்னர் வேப்பூர் போராட்டத்தில் பங்கேற்றேம்.சேப்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ள கடை வாசலில் எங்கள் இரவை கழித்தோம்.

 

நாள் 4:

22-01-17 காலை ஒரு மசூதியில் எங்கள் பயணக்குழுவிற்கு புத்தூணர்ச்சிக்கு காலை உணவு தயார் செய்தனர். உளுந்தூர்பேட்டை மற்றும் செல்லும் பாதையில் உள்ள போராட்டக்குழுவினர் மற்றும் மக்கள் அனைவரிடமும்விழிப்புணர்வு செய்தோம் .

நாள் 5:

23-01-17 ஐந்தாம் நாள் சென்னையை நெருங்கிவிட்டோம் ஆனால் சட்டம் ஒழுங்கு சரி இல்லாத காரணத்தாலும்நடைபயணம் போரட்டக்குழுவின் பாதுகாப்பு கருதி வேகமாக நடைபயணம் மேற்கொண்டோம் ஆனால் எங்கள் பிரச்சாரம்ஓயவில்லை. இறுதியாக நாங்கள் சென்னை பெருங்குளத்தூரில் எங்களுக்கு திரு. பொன்ராஜ்) என்பவர் தங்க இடம்அளித்தார்.

நாள் 6:

காலை இந்தியாவின் சிறந்த நூறு பெண்மணிகள் விருதினை மேதகு குடியரசு தலைவர் கையால் பெற்ற திருமதி. தமிழ்செல்வி நிகலோஸ்  அவர்களிடமும் திரு. பொன்ராஜிடமும் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம் அவர்கள்தமிழ்நாடு முழுவதுமாக இந்த கோரிக்கைகளை கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். எங்கள் மெரினா பயணம்சென்னையை அடைந்தாலும் மெரினாவில் திரண்டு இருந்த லட்சகணக்கான இளைஞர்களிடம் நேரடியாக வெளிபடுத்தமுடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம் உள்ளது.

கடந்த வந்த பாதைகளில் பல்வேறு நபர்களிடம் வெளிநாட்டு  குளிர் பானங்கள் தவிர்க்க (Pepsi & coca cola) மரம் வளர்க்க, மணல் கொள்ளை, மரபணு மாற்று விதைகள், பார்த்தீனியம், சீமை கருவேல மரம் போன்ற விழிப்புணர்வைஏற்படுத்தினோம்.

முகநூலில்  I love Trichy

எதிர்காலம் வளமானதாக்க விவசாயிகளின் இன்றைய வாழ்வாதார பிரச்சனைகளை கையில் எடுத்து நடைபயணம் மேற்கொண்ட  நாளை தலைமுறையினர் சரியான இலக்கை நோக்கி தான் பயணிக்கிறார்கள்.  நம்ம திருச்சி இதழ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.