காதலியை எரித்துக்கு கொன்று தானும் தீ குளித்து தற்கொலை செய்த மாணவர் !

0 42
காதலி பிரிந்ததால் கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார்.பின்னர் அவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ் ( வயது 26). அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருபவர் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், சில காரணங்களுக்காக லட்சுமி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமி வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆதர்ஷ், லட்சுமி மீது பெட்ரோலை ஊற்றினார். இதனால், லட்சுமியும், அங்கிருந்த மாணவிகளும் அலறியடித்து வகுப்பை விட்டு வெளியே ஓடினர்.இருப்பினும் தொடர்ந்து, துரத்தி வந்த ஆதர்ஷ், லைட்டர் மூலம் லட்சுமி மீது தீ வைத்தார். தொடர்ந்து ஆதர்ஷ், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.