முளைத்தால் மரம் இல்லையெனில் உரம் விதைப்பந்துகள் – அசத்தும் திருச்சி இளையோர் சமுதாயம் !

0 29

முளைத்தால் மரம் இல்லையெனில் உரம்” விதைப்பந்துகள்

இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், திருச்சியில் இளைஞர் ஜெயராஜ் அஜய் என்பவர் தன்னுடைய பிறந்தநாளில் தன்னார்வலர் அமைப்புகள் துணையோடு விதை பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

திருச்சியில் 2 நிமிடங்கள் 17 விநாடிகளில் 2017 விதைபந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி . விதைப்பந்து என்பது களிமண் மற்றும் உரம் அல்லது பசுஞ்சாணத்தலான உருண்டை ஆகும்.

இவற்றின் நடுவே  மூலிகைகள் , மர விதைகள், மலர்விதைகள் இருக்கும். பொதுவாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்கலால்  உணவாக்கப்படலாம். வெப்பத்தால் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். விதைப்பந்தானது அவ்வாறில்லை வெளியே செல்லும் போது நிலங்கள், காடுகள், மலைகளில் வீசி செல்லலாம்.

 

எலி, எறும்பு குறுவிகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை பாதுகாப்பாய் இருக்கும். விதைப் பந்தில் கலந்துள்ள உரம் அல்லது சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்கவப்படுத்தி விடும். உரம் அல்லது சாணத்தை உண்ணும் நுண்ணு்யிர்களின் கழிவை வேர் உண்டு மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும். இந்த விதைப்பந்து திட்டத்தை 200 கிலோ மண், 20 கிலோ சாணம் , 20 கிலோ இயற்கை உரம் , 2 கிலோ நாட்டு மர விதைகளைக் கொண்டு 2017 ஆண்டை குறிக்கும் வகையில்     2 மணி  17 நிமிடங்களுக்கு நிகழ்ச்சியினை துவங்கி 217 மாணவ, மாணவிகளுடன் 2017 விதைப் பந்தை 2நிமிடங்கள் 17விநாடிகளில் தயாரிக்கும் நிகழ்வினை கெம்ஸ் டவுன் டிஇஎல்சி  நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

குறிப்பிட்ட இலக்கைத் தாண்டி 4034 விதைப்பந்துகள் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பணியால் சாதனை நிகழ்வானது .

விதைப் பந்தை உருவாக்கியவர்கள் ஆல மர வடிவில் வடிவமைத்து நின்றனர். விதைப்பந்தை கொண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உருவத்தினை வடிவமைத்து விதைத்துக் கொண்டேயிறு முளைத்தால் மரம் இல்லையெனில் மண்ணிற்கு உரம் என உறுதியேற்றனர்.

விதை பந்து தயாரிப்பு குறித்து  ஜெயராஜ் அஜய்  நம்மிடம் பேசும் போது…

 

விதைப் பந்து என்பது மண், எரு, மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து, நீர் சேர்த்து சிமெண்ட் கலவை போல் கெட்டியாக கொண்டு வர வேண்டும், மற்றும் மர விதைகள் சேகரித்து இவற்றோடு காய்கறி, பூக்கள் விதைகளை சேர்க்கலாம். இவ்விதைகள் மர விதைகளை வளர்க்க உதவும் மற்றும் தேனீக்கள், பறவைகள் ஆகியவற்றிற்கும் பயன் உள்ளதாக இருக்கும். கலந்து வைத்த மண்ணை சிறிதளவு விதைகளை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு இளைஞர் மனதிலும் இயற்கையைப் பற்றி விதையாய் விதைப்பது எனது கனவு. எனவே விதைப் பந்துகளை செய்ய தொடங்கினேன்…..

‘இறகுகள்’ அமைப்பு எனக்கு கைகொடுத்தது. சென்ற வருடத்திலிருந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடிவு செய்து கொண்டிருந்தோம். ஆனால் சரியாக நேரம் கூடிவரவில்லை.

பிப்ரவரி 19,2017 ஆம் நாளில் விதைப் பந்துகளை செய்ய முடிவு செய்தோம். அன்று எனது பிறந்த நாள். எங்கள் நோக்கம் 2017 விதைப் பந்துகளை செய்து, 2 : 17 மணிக்கு ஆரம்பித்து, எல்லாமே 2017 ஆக இருக்க முடிவு செய்தோம். அதுவும் நன்றாக அமைந்தது.

‘இறகுகள்’ ராபின் அண்ணா, இந்த நிகழ்ச்சியை நடத்த மிகவும் ஆதரவு தந்தார்.

150 தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் 150 பள்ளி மாணவர்களை வர வைத்து செய்தோம்.

 

நாங்கள் எதிர்பார்த்ததை விட, 4500 விதைப் பந்துகளை, 5 நிமிட நேரத்தில் செய்து முடித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தோம்.

எனக்கு உதவிய மெர்சி அக்கா, கற்பகம்  மேலும் இதில் எங்களுக்கு உதவியாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும்  ‘இறகுகள்’ அமைப்பின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தருணத்தில் கண்டிப்பாக ‘இறகுகள்’ அமைப்பைப் பற்றி நான் கூற வேண்டும். ‘இறகுகள்’ அமைப்பை ‘student’s voice’ என்று சொல்லலாம். ஏனென்றால் ‘இறகுகள்’ அமைப்பு மாணவர்களுக்காக குரல் கொடுக்கும். கைகள் சேர்க்கும்.

இது போல் தான் இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக, நலமாக இருப்பதை பார்ப்போம். அதைத்தான் ‘இறகுகள்’ செய்து கொண்டிருக்கிறது.

இந்த முயற்சியில் ஈடுபட்ட ஜெயராஜ் அஜய்,  ‘இறகுகள்’ நிறுவனர் ராபின்  மற்றும் இதில் பங்கெடுத்த தன் ஆர்வலர்கள் அனைவரையும் அங்கும் இணைதளம், நம்மதிருச்சி வார இதழ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

வெற்றிச்செல்வன்

நம்ம திருச்சி இதழ்கள்

Leave A Reply

Your email address will not be published.